பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். (ருகூ அகமெடுத்துக்கொண் டிருப்பானை எழுபது பிராயத்தின்கீழ் முப்பத் தைந்து பிராயத்தின் மேற்பட்டார் மந்திரப் பிராம்மணம் வல்லார் ஓதுவித்து அறிவானைக் குடவோலை இடுவதாகவும். அரைக்கானிலமே உடையானாயிலும் ஒருவேதம் வல்லானாய் நாலுபாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான் அவனையும் குடவோலை எழுதிப்புக இடுவதாகவும். அவர்களிலும் காரியத்தில் நிபுணராய் ஆசாரமுடைய ரானாரையே கொள்வதாகவும். அர்த்தசௌசமும் ஆத்மசௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதாரைக் கொள்வ தாகவும். எப்பேர்ப்பட்ட வாரியங்களும் * செய்து கணக்குக்காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றவைப்போவ்வை மக்களையும் இவர் களுக்கு அத்தைமாமன் மக்களையும், இவர்களுக்குத் தாயோ டுடப் பிறந் தானையும், இவர்கள் தமப்பனோடுடப் பிறந்தாளையும், தன்னோடப் பிறந்தானையும், இவர்களுக்குப் பிள்ளைகொடுத்த மாமனையும், இவர்கள் பிராமணியோடுடப்பிறந்தானையும், தனனே டப்பிறந்தாளை வேட்டா னையும், உடப்பிறந்தாள் மக்களையும், தன்மகளை வேட்ட மருமகனையும், தன் தமப்பனயும், தன்மகனையும் ஆக இச்சுட்டப்பட்ட பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பொதாராகவும். "அகம்மியாகமனத்திலும், மகாபாதகங்களில் முன்படைந்த நாலு மகாபாதகத்திலும் எழுதப்பட்டவரையும், இவர்களுக்கும் முன் சுட்டப் பட்ட இத்துணை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறாத தாகவும். ஸம்ஸர்க்க பதிதரை பிராயச்சித்தம் செய்யுமளவும் குடவோலை இடாததாகவும். ஸா ஹலியாயிருப்பாரையும் குடவோலை எழுதப்பெறா தாராகவும். பாத்திரவியம் அபகரித்தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறாதாராகவும். எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான் கரதபிராயச்சித்தஞ்செய்து சுத்தரானானாயும் அவ்வவர் பிராணாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை யெழுதிப்புகவிடப் பெறாததாகவும். மசா பாதகஞ்செய்து பிராயச்சித்தஞ்செய்து சுத்தரானாரையும் கிராமகண்ட கராய் பிராயச்சித்தஞ்செய்து சுத்தரானாரையும் அகம்மியாகமனம்செய்து பிராயச்சித்தஞ்செய்து சுத்தரானா ரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனை • வாரியத்துக்கு யோச்சியால்லாதாரைக் குறிப்பிடுகிறது.