பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை, இச் சோழசரித்திரத்தைக் கனந்தங்கிய சென்னைச் சர்வகலா சங்கத்தாரும் நன்குமதித்து, நம் மாணவர்க்கு உபயோகமாம்படி இதனை 1912-ம் வருஷத்து B. A. வகுப்புப் பாடமாக நியமித்திருத்தற்குப் பெரிதும் மகிழ்வடைகின்றேன். அச்சங்கத்தார் கருதியவாறே, மாண வர்க்குத் தம் நாட்டுப் பூர்வசரித்திரத்தின் ஒரு பகுதியை இந்நூல் நன்குவிளக்கி மகிழ்விப்பதோடு இராயாவர்களை இத்தகைய முயற்சியிற் பின்னும் ஊக்கிளிடுதற்கு இது தக்க தூண்டுதலாகு மென்பதுந் திண்ண ம். இராயரவர்கள் எழுதிய இந்நூல் சோழவரசர்கள் சரித்திர மெல்லா வற்றையும் ஒருங்குகூறிவிட்டதென்று சொல்லுதல் இயலாது, நாட்டில் ஆங்காங்குக் கிடைத்த சாதனங்களைக்கொண்டே இச்சரிதம் எழுதப் பட்டதாகலின், இனிக்கிடைப்பனவற்றாற் குற்றங்குறைபாடுகள் இத னிடைத தோன்றவும், சிற்சிலவிடங்களில் அபிப்பிராயபேதங்கள் நிகழ வுங் கூடும். உலகத்துச் சரித்திரசம்பந்தமான நூல்கள் பெரும்பாலவும், முன் குறைவுடையனவாகக் கருதப்பட்டுக் காலாந்தரத்தில் நிறை வடைந்தனவேயாம். ஆதலால் தமிழ்நாட்டாாகிய நம்மவர்க்குப் புதிதான துறையொன்றிற் புகுந்து இராயரவர்கள் சிரமமெடுத்திருப் பதை நோக்குமிடத்து, இந்நூலில் யாவர்க்கும். அருமைப்பாடே தோன்றுமென்பதில் ஐயமில்லை. இவற்றைச் சிந்தைவைத்து, இராய பவர்க... மேலும் இத்துறையில் அக்குவோமாயின், அவர்களாபாய்ச்சி யால் எனைச்சே.பாண்டியர் வரலாறுகளும் பிறவும் வெளிவந்து தமிழின் பெருடையைச் சிறப்பிக்குமென்பது திண்ணம். இத்தகைய - அரும்பெருமுயற்சிகொண்டு இச்சோழசரித்தி வமுதை நம் தமிழகத்திற்கூட்டிக் களிப்பித்த இராயாவர்கட்கு நீடிய ஆயுளையும், தக்க அறிவாற்றல்களையும் தந்தருள எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளின் றிருவருளைச் சிந்தியா நிற்கும், மதுரைத்தமிழ்ச்ச ங்கம். ) 6-2-10. க. .. பொ. பாணரை . ரை.