பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இறையிலி தேவதானம் என்று எழுதிக்கொள்வார்கள். ஒவ்வோர் ஊரும் தம்மில் விளைந்த நெல்லில் ஒருபகுதியை வரி யாக அரசனுக்கு இறுக்கவேண்டும். அப்படிச் செய்யாதவர்கணிலத்தை அவர்களிடமிருந்து திரும்பவாங்கிக்கொண்டு ஊர்ப்பொது நிலமாக்கி, அவ்வவ்வூர்களே தமக்குள் விலையாக்கி, அதனால் வரும் பணத்தை இறைக்குக்கொடுப்பது வழக்கம். "யாண்டு உச-வது, நாள் கஙச-னால், உடையார் ஸ்ரீராஜராஜதேவர் தஞ்சாவூர்ப் பெரியசெண்டு வாயிற் சித்திர கூடத்துத் தெற்கில் கல்லூரில் எழுந்தருளியிருந்து சோணாட்டும், சோணாட்சிப்படும் புறநாடுகளிலும், தொண்டை நாட்டிலும், பாண்டி நாடான ராஜாராஜவளநாட்டிலும், பார்ப்பன ஊர்களிலும், வைவானஸர் ஊர்களிலும், மணர்களர்களிலும், காணியுடையார் யாண்டு கஈ-வது முதல் உங-வது வரையில் ஈராண்டு நிரம்பி மூவாண்டு தந்தங்காணி யான நிலங்களக்கு அவ்வவ் ஊர்களிலாரோடும், ஊரிடு வரிப்பாடு இறை இறாக போனார் காணி உடையாரைத்தவிர, ஊர் நிலமாய் அவ்வவ் வூர்களிலாரே விற்றுக்கொள்ளப் பெறுவார்களாகவும். யாண்டு உசவது முதல் ஈராண்டு நிரப்பி மூவாண்டு ஊரிவேரிப்பாடு இறை இறாது போனார் காணி உடையாரைத்தவிர, அவ்வவ் ஊர்களிலாரே விற்றுக் கொள்ளப் பெறுவார்களாகவுமென்று இப்பரிசு திருவாய்மொழிந்தருளி னபடி திருமந்திரவோலை நாயகன் மும்முடி சோழவ ஹமாராயனும் மும்முடிச் சோழபோசனும் ஒப்பிட்டுப் புகுந்த கேழ்விப்படி, உச-வது நாள் கசகூ-னால் வரியிலிட்டது.*" என்பது ஓர் இராயசம். இதனால் வரி இறாது போனவர்களது நிலம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது விளங்கும். வாங்கப்பட்ட வரித்தொகைகளைக் கணக்கிற் பதிந்து கொள்வோர் க்கு வரியிலார் என்று பெயர். வந்த வரியை எவ்வாறு செலவிடுவது என்பதைத் திட்டஞ் செய்வார், வரிக்குக் கூறு செய்வார் எனப்படுவர். வெளிப்புறத்தூர்களில் வரிவிஷயமான கணக்குகளை வைப்பவர் பலாத லின் அவர் கூடியிருக்குமிடத்திற்குப் புரவரித்திணைக்களம் என்றும், - - S, I. I. Vol. III. III. p. 14-15.