பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுக சோழவமிசசரித்திரச்சுருக்கம். சோழசக்கரவர்த்திகள் செம்பு, வெள்ளி, பொன் இம்மூன்று உலோகத்திலும் நாணயங்கள் செய்து நாட்டில் வழங்கச் செய்தனர். இக்காசுகளிற் சில இக்காலத்தும் ஆங்காங்குக் காணலாம். அவற்றிலும் முதல் இராஜராஜனது செப்பு நாணயங்கள் மிகுதியும் எளிதிற் கிடைக் கின்றன. அக்காலத்துப் பொன் வெள்ளி நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரே எடையுள்ளனவாய்ச் செய்யப்பட்டிருந்தனவென்று நாணயபரீட் சையிற் பெரிதும் ஆராய்ச்சி செய்துள்ள கன்னிங்காம் துரை எழுதி யிருக்கிறார். அக்காலத்தே நிறுத்தல், முகத்தல் முதலிய அளவு கட்கும், பொன் இரத்தினங்கள் நிறுத்தற்கம், பொன் மாற்று நோக்குகற்கும் , அரசர் கத்தாரால் நியமிக்கப்பட்ட மரக்கால் முதலியனவிருந்தன. அரசாங்க முத்திரையிட்ட மரக்காலுக்கு இராஜராஜன் (1) காலத்து இராஜகேசரி என்பது பெயர். இதற்குச் சமமான தஞ்சாவூர்க்கோயில் மரக்காலுக்கு ஆடவல்லான் என்பது பெயர். ஆனால் நாடுதோறும் மரக்காற்பெயர்கள் வேறுபட்டிருந்தன. அரசாங்க முத்திரையிட்ட எடைக்கல்லுக்குக் குடிஞைக்கல் என்று பெயர். தஞ்சாவூர்க்கோயிலில் இதற்குச் சம எடையுள்ள கல்லுக்கு ஆடவல்லான என்பது பெயர். (இப்பெயர்கள் சிவபிரான் பெயரா லிடப்பட்டன.) பொன் மாற்றுக்கு யைத் திருந்த ஆணிக்குத் தண்டவாணியென்பது * பெயர். பொன் முதலிய விலை யுயர்ந்த பதார்த்தங்கள் சிறுக்கக் கழஞ்சு, மஞ்சாடி முதலிய நிறைகள் வழங்கின. நாடுகள் தோறும், இ நமருங்கும் நிழலைத்தரும் மரங்களுடைய சாலைகளும், பெருவழிகளும் பலவிருந்தன. “ அரங்கம் நோக்கிப் போந்த பெருவழிக்குக் கிழக்கு" என்றாற்போல்வனவற்றால், இவையிருந்தன வென்பது நன்கு விளங்கும். சோழர்கள் தம் நாட்டை நீர்வளமுடைத் தாபிருக்கச் செய்வதில் மிக்க கருத்துடையவர்கள். சோணாட்டுக்கு இது பற்றியே புனனாடு என்றோர் பெயருண்டு. பண்டைக்காலத்துக் கரிகாலன் காவிரிக்கு இருபக்கமும் கரையிடுவித்தான் என்பதும், பிற்காலத்துப் பெருவளவன்வாய்க்கால், வீரசோழனாறு, முடிகொண் டான, வெட்டாறு பனனும் பெயர்கள் வழங்குவதுமே மேற்கூறிய • S. 1. I, Vol. II. p. 1. - -