பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுச சோழவமிசசரித்திரச் சுருக்கம். சோழவம்சத்தாசர்கள் காலத்து ஆங்காங்கு அறச்சாலைகளும் (சத் திரமல்லது ஊட்டுப்புரைகள்,) ஆதுலர்சாலைகளும் வைக்கப்பட்டிருந்தன. "முடிகொண்டசோழப்பேராற்றுக்கு வடகரையில் ஆதுலசாலையாகக் கொண்ட மடத்திலே ஆதுலரையும், அநாதரையும்"* உண்பித்தற்கு விராடராஜன் நிலமான்யம் விட்டிருந்தான். இக்காலத்து மலைய 'ளப் பிராந்தியத்தில் நடப்பது போலக் கோயிலிலையே உச்சிசந்தி சமயத்தில் பிராமணர்பலர் உண்பிக்கப்பட்டு வந்தனர். “இத்தேவர் அறச்சாலை உண்கைக்கு இறையிலிசெய்து குடுத்துக்கொண்ட எம்மிலிசைந்த நற்காசு" : "அரயன் கருவுணாபகரான களப்பாளராஜர்செய்வித்த சாலைக்குச் சாலைப் புரமாக நாங்கள் இறையிலியாக விற்றுக் குடுத்தநில மாவது" - திருவானைக்கல்லில் வட்டாரகர் உச்சம்போது அமுது செய்யும்போது வெடி.வல்லாரிருவர் வாஹணரைஊட்டுவதற்கு இவ் வூர்காச்சுவன் கேசவந்துர்க்கன் வைத்தபொன் கச0 கழஞ்சு" * "ஸ்ரீ அரங்கத்துப்பெருமானடிக ளச்சம்போ தமுதுசெய்தருளும்போது வெடி.வல்லானொருவாஹணனை ஊட்டுவதாக்' " என்பவற்றால் ஊட் டுப்புரைக்கு வேண்டுந் திரவியம் எங்கிருந்து வந்ததென்பதை அறியலாம். கோயில் நிலத்தைப் பெற்றுச் சிலகடமை இருப்பதாகப் பிரமாணத் தீட்டுக்கொடுத்துத்த பறினவர்க்கும், சில ஊழியம் செய்வதாக ஒப்புக் கொண்டு தவறினவர்க்கும் செய்யும் நியாயம் அடியில் வருவனவற்றால் விளங்கும். கீழ்வரும் சாஸனம் திருச்சாய்க்காடு, சாயாவனேசுவரர் கோயில் இரண்டாம் பிராகாரம் வடசுவரில் எழுதப்பட்டுளது. "யாண்டு பதினெட்டாவது நாள் நூற்று ஐம்பத்தாறினால் பிர சாதம் செய்தருளின திருமுகப்படி; திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின மைகொண்டான் இராஜாதிராஜ வளநாட்டு உடையார் திருச்சாய்க்

  • திருப்புகலூர்.

1 திருப்புகலூர்; See also'S. I. I. Vol. I1. p. 133, “சேவித்துவந்த சிவயோகிகள் பதின்மரும் உடையார்சாலையிலே உண்ணக்கடவர்.,' 1 திருப்புகலூர். $ செந்தமிழ்த் தொகுதி. 3-பக்கம் 200. TEp. An. Rep. for 1891:2-No. 73 of 1892.