பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இவர்கள் காலத்துத்தான், நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகள் தொகுத்தது. சேக்கிழார் பெரிய புராணமும், புத்தமித்திரன் வீர சோழியமும், சயங்கொண்டார் பரணியும், பவணந்தியார் நன்னூலும், திருவிசைப்பாக்களும், மெய்கண்டதேவர் சிவஞான போதமும், இன்னும் பற்பல கிரந்தங்களும் எழுதப்பட்டன. கோயில்கள்தோறும் திருப் பதிகம் பாடும்படி இவ்வாசர்கள் திட்டஞ்செய்து மானியமும் விட்டிருந் தனர். திருவாமாததூரில் ஒரு சாஸனம், குலோத்துங்கன் 1) அவ் ஆரிலே திருப்பதிகம்பாட 16-குருடர்களை யேற்படுத்தி அவர்களுக்கு உணவுக்கும், ஆடைகளுக்கும் வேதனம் கொடுத்து வரத் திட்டஞ் செய்தானென்று கூறுகிறது. * குருடர்களுக்கு இஃதோர் நல்ல விர்த்தியன்றோ. விஜயாலயன் முதற் குலோத்துங்கன் (1) வரையிருந்த அரசர்கள் சைவராயிருந்தனர். விக்கிரமன அக்காலத்து வைஷ்ணவத்தில் அபி மானம் வைக்க ஆரம்பித்தான. அவன் மகன் கொடியவைஷ்ணவ விரோதி. பிற்காலத்தே, இவ்வாறு வைஷ்ணவத்திலும் சைவத்திலும் பற்றுடைய அரசர்கர் பட்டந்தரித்தார்கள். இவ்வமிசத்தார்கட்குக் குலதெய்வம் திருச்சிற்றம்பலநாதர். ஆதலால் இவ்வூர்க்கோயிலை அரச ரொவ்வொருவரும் பொன்மயமாக்கிவந்தனர். மேற்கூறியவாறு, பலவற்றானும் நன்மை யளித்து, நாகரீகம் மிகுத்து, பராக்கிரமத்தோடு ஆண்டுவந்த சோழவமிசம், குறைந்த வளவு பதினைந்து நூற்றாண்டுக்காலம், சிலகாலம் பிரபலமாகவும், சில காலம் பிறர்க்குட்பட்டும், தொடர்ச்சியாக ஆண்டு வந்த தென்பது திண்ண ம். சோழவமிசசரித்திரச்சுருக்கம் முற்றிற்று.

  • Ep. An. Rep. for 1903-4 No. 483 of 1903.