பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அனுபந்தம் 1. அபிதான விளக்கம். அகளங்கன் :- சோழசக்கரவர்த்தி; விக்கிரமசோழ தேவன்; குலோ த்துங்க சோழதேவன் (1) மகன். 1118 கி. பி. யில் பட்டந்தரித்தவன். இவன் மனைவியர், முக்கோக்கிழானடிகள், திரிபுவன முழுதுடையாள், தரணிமுழுதுடையாள். வேங்கிநாட்டுத் தெலிங்கவீமனையும், வெல நாண்டுவின் அரசன் சோடனையும் ஜயித்தான். இவ்வரசன் 13-வருட மாசாண்டவன். அகாலவர்ஷ கிருஷ்ணதேவன் அல்லது கன்னாதேவன்:இரட்டவ மிசத்தரசன். கி. பி. 949-ல் தக்கோலத்தில் சோழ இராஜா தித்தனுடன் பொருது முதலில் தோல்வியடைந்து, பிறகு தன்சகோதரி புருஷனும், தன் கீழ்ச்சிற்றரசனுமாகிய பூதுகன் நயவஞ்சகத்தால், மேற்படி சோழவாசனைக் கொன்றபின், சோழ இராச்சியத்தைக் கைப் பற்றி உத்தேசம் 20-வருஷகால மாசாண்டான். அதிராஜேந்திரன்:- சோழசக்கரவர்த்தி; வீரராஜேந்திரன் மகன். இவன் சொற்பகாலமே ஆண்டவன். குலோத்துங்கன் (1)னால் இவன் இராஜ்ஜியம் பிடுங்கிக்கொள்ளப்பட்டது. அநபாயன்:- அபயன், ஜயதான், இராஜேந்திரசோழதேவன் II. குலோத்துங்கன் (1) சுங்கந்தவிர்த்த சோழன், சோடிசக்கரவர்த்தி. இவன் தந்தை கீழ்நாட்டுக் சாளுக்கிய இராஜராஜன் (I-ன்) புதல்வன். இவ தாயானவள் இராஜேந்திர சோழதேவன் (I-ன்) மகளாகிய அம்மசொதேரி. இவனுக்கு மக்கள், சோடகங்கள், மும்முடிசோழன், வீரசோடன், விக்கிரமசோழன், என்னும் தொடக்கத்தார் எழுவர்; மகள், அம்மக்காதேவி. சோழ இராஜ்ஜியத்தை, தௌஹித்திர முறைகொண்டாடி கி. பி. 1070-ல் அபகரித்தவன். சோழர்களில் மிக்க பராக்கிரமசாலி. கலிங்கத்துப்பரணியின் நாயகனும் இவனே. இவன் உத்தேசம் 48-வருஷம் அரசாட்சி செலுத்தினான், இவன் மனைவியர், தீன சிந்தாமணியாகிய மதுராந்தகி, திபாவல்லி, எழிசைவல்லபி,