பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அச அனுபந்தம் 1. வென்றான். பாமேசுவர போத்தரையனுக்குப் பின் பட்டம் பெற்றவன். இவன் தந்தை, இரண்ய வர்ம்மன். பராந்தகன் I:- 'மதுரைகொண்ட கோப்பரகேசரி.' சோழர்களில் பராக்கிரமசாலிகளுள் முதல்வன். இராஜசிம்ம பாண்டியன், ஈழத்துக் காசியபன் V. 'வைதும்பசந்தயன், வாணர்கள் இருவர், இவர்களை ஜயித்தவன். சிற்றம்பலம் பொன்வேய்ந்தவன் இவனே. இவன் மனை வியர், கோளமாதேவி முதலியோர். மக்கள், இராஜாதித்தன், கண்ட ராதித்தன் (I) அரிஞ்சயன், ஆதித்தனாகிய கோதண்டராமன். பிருதிவிபதி I:- கங்கவரசன்; பல்லவ நிருபதுங்கவர்ம்மன் கீழா சாண்ட சிற்றரசன். இப்பல்லவ நிருபதுங்கவர்ம்மனுக்குத் துணையாகப் பாண்டியன் வரகுணனோடு திருப்புறம்பியத்தில் யுத்தஞ்செய்து போர்க் களத்து மடிந்தான். பிருதிவிபதி II:- முதல் பிருதிவிபதியின் பெயான்; பராந்தகன்(I) வாணர்களை சயித்து அவர்கள் நாட்டை இவனுக்குக் கொடுத்து, இவனை அன்று முதல் “செம்பியன் மாவலிவாணராயன்" என்று பெயர் தரிக்கக் கட்டளையிட்டான். இவன், பராந்தகன் (I) காலத்துக்குப்பிற்பட்டு, இரட்டகன்ன தேவனால் சோழ இராஜ்ஜியம் கைக்கொள்ளப்பட்ட பொழுது, கன்னரதேவனோடு சேர்ந்து கொண்டான். இவன் மகள் மாதேவடிகள்; இராஜாதித்தன் மனைவி. போசளவீரநாரசிம்மதேவன்:- போசல வமிசத்தான். இவர்கள் இராஜதானி துவார சமுத்திரம். இவன், சோழ இராஜராஜதேவன் (III)-க்குப் பெண் கொடுத்த மாமன். பின்னோன் கஷ்டதசைகளில் மிக்க உதவி புரிந்து 'சோழ இராஜ்ஜிய பிரதிஷ்டாபனாசாரியன்' என்னும் பட்டம் பெற்றான். இவன் மகன இராமநாததேவன்; வீரசோமேசு வரன் இவர்கள் கொள்ளிடத்தின் வடகரையில் சமயவரம் என்னும் பெயருடைய கண்ணனூரில், கோட்டை முதலிய கட்டிக்கொண்டு, அதனை இராஜதானியாக்கிச் சோழர்களுக்கு உதவிபுரிய அவ்விடம் வந்தவர்களென்று கூறிக்கொண்டு, ஆண்டுவந்தார்கள். வரகுணபாண்டியன் - பாண்டியர்களிலோர் பராக்கிரமசாலி. பல்லவ வாசனையும் அவனுக்கும் துணையாக வந்த கங்க பிருதிவிபதி (I)-யையும்