பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

viii லாறும் உரிய இடமறிந்து சேர்க்கப்பட்டது. சுவை வேறுபாடு தோன்ற வேண்டிச் சில புதுமைச் செய்தி கள் அக்கால நிலைக்குப் பொருந்துமாறு இவ்வரலாற் றிற் சேர்க்கப்பட்டுள. கோப்பெருஞ் சோழன் வரலாற்றிலே தமிழ்ப் புலவர் அனைவரும் அறிந்தின்புறும் பிசிராந்தையார் நட்பின் பெருமை நன்கு விளக்கப்பட்டது. அந்நட்பின் பெரு மையை இந்நாளைச் சிறுவர் அறிதல் வேண்டும் என்றே செய்யுட்களை யெல்லாம் உரை நடையாக்கி உரிய வண் ணம் அறிந்து அமைத்துளேன். கோப்பெருஞ் சோழன் அமைச்சரும் அரும்புலவருமாகிய பொத்தியார் மனை வாழ்வு கூற வேண்டுவது அவசியமாதலால், அஃது ஒரு வாறு புனைந்துரைக்கப்பட்டது. சேர மன்னன் ஒருவன் அவனை வென்று பூத சதுக்கத்தைக் கொண்டு சென் றான் என்ற பழஞ்செய்தியும், கோப்பெருஞ் சோழன் மக்களோடு மாறுபட்ட செய்தியும் பழைய வரலாறு களுக்கு மாறுபடாவண்ணம் புதுமுறையால் அமைக்கப் பட்டன. மக்கள் குணம் ஒருவாறு பிறகு சீர்திருத்தம் பெற்றதாகவும் காட்டப்பட்டுளது. சோழன் செங்கணான் என்றும் கோச்செங்கட் சோழன் என்றும் அறியப்படும் சோழமன்னன், சைவத் திருமுறைகளாலும் திருமங்கையாழ்வார் திருவாக்காலும் புகழப் பெறும் பேறு பெற்ற அரசனே யாவன் என்பது சாஸன ஆராய்ச்சித் துறையிற் றேர்ந்த ஸ்ரீமான் வெங் கையர் என்பார் கொள்கையாம். இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டே செங்கணான் வரலாறு இங்கு விளக்கி யெழுதப்பட்டது. இவன் சேரமான்