பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

________________

84 எண்ணுவரே! ஆகையால், யாரேனும் ஒரு பெண்ணை மணந்துகொள்ள லே சாலும் என்று எண்ணுகிறேன். அமைச்சர்:-- இரு பெண்டிரையும் மணத்தல் நலம். நும் முன்னோர் பலர் அங்கனமே செய்திருக்கின்றனர். நும் தந்தையார்க்கும் இருவர் தேவியர் இருந்தனர். வளவன்:-அது நுமது விருப்பமாயின், அவ்வண் னம் ஆகுக. இவ்விரு குடியினரிடமும் வேண்டுவன பேசி முடிவு செய்தல் நும் பொறுப்பேயாகும். இருள் வந்து சூழும் முன்னே நாம் அரண்மனைக்குச் செல் வோம். . அமைச்சர்:- அவ்வண்ணமே செய்வோம். பின்னர் அவ்விருவரும் அரண்மனைக்குட் சென் றனர். பிறகு சில தினங்களில் இரும்பிடர்த் தலையார் பாண்டிய நாட்டுக்குப் போய் அந்நாட்டு மன்னர் மகளைச் சோழ மன்னனுக்கு மணம் புரிந்து கொடுக்குமாறு உரிய முறைகளாற் கேட்டனர்; அதனால், எதிர்காலத்தில் அந் நாட்டுக்கு விளையும் நன்மைகளை எடுத்து விளக்கிக் கூறி னர். வெண்ணிப் போர்க்களத்திலே இறந்த பாண்டியன் மைந்தன், கரிகாலன் ஆட்சிக்கடங்கி இப்பொழுது அரசாண்டுகொண்டிருந்தான். அவன் இச்செய்தியைக் கேட்டுச் சந்தோஷித்தான். சோழர்க்குக் கீழ் அடங்கி யிருக்கும் நிலைபைக்காட்டிலும், அவர் குடியிலே பெண் கொடுத்து ஒரு நிகராக வாழ்தல் நலமேயாம் என்று எண்ணினான். ஆகையால், அவன் இரும்பிடர்த் தலை யார் வேண்டுகோளுக்கு இசைந்தான்; அவர்க்கு உரிய சிறப்புக்கள் செய்தான். '