பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

________________

36 னர். பத்துத் தினங்கள், நாடெங்கும் பல வகையான தேவாலயங்களிலும் விசேஷமான உற்சவங்கள் கொண் டாடப் பெற்றன. இரும்பிடர்த் தலையார் அங்கு அடைந்திருந்த மன்னர்களுக்கும் பிற தலைவர்களுக்கும் அவரவர் நிலைமைக்கேற்ற சிறப்புக்கள் செய்தனர். பிறகு சில தினங்கள் சென்றன. பாண்டிய மன்ன ரும் சோ மன்னரும் விடைபெற்றுச் சென்றனர். வேளிர் பலரும் விடைபெற்றகன்றனர். திருமாவளவன் முன் போல அரசுரிமையை மேற்கொண்டு, நாடெங்கும் சஞ் சரித்து, ஆங்காங்குக் குடிகட்குள்ள குறைகளை நேரில் விசாரித்தறிந்து, அவற்றுக்கு வேண்டிய பரிகாரங்களை அவ்வப்போது செய்து வந்தான். தேவியர் இருவரும் ஒருமனமுடையராய்த் திருமா வளவன் அன்பின் செல்வத்தில் திளைத்து வந்தனர். ஐந்து ஆண்டுகள் ஆயின. பாண்டியன் குமரி முதற்கண் ஒரு பெண் மகவு ஈன்று பின்பு ஓர் ஆண் மகவும் ஈன்ற னள். வேளிர் குலக் குமரி முதலிலே ஓர் ஆண் மகவும் பின்பு ஒரு பெண் மகவும் ஈன்றனள். நான்கு குழவிக ளும் அரசன் மனமகிழ மழலை மொழிந்து மடநடையாடி விளையாடி வந்தனர். திருமாவளவனுக்கு இக்காட்சிகளைக் கண்டு மனத் துக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்றாயினும், வட நாட்டுக்குப் போகும் போர் முயற்சி தடைபட்டதே யென்ற கவலை பனத்தில் இருந்துகொண்டே யிருந்தது. அதனால், அவன் அமைச்சரோடு ஆராய்ந்து, நாடாட்சிக்கு வேண் டும் முறைகள் செய்து வைத்து, வடநாடு நோக்கிச் செல் லக் கருதினான்.