பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

________________

S9 கரிகாலன், " அங்ஙனமாயின், இன்னும் சில தினங் களில் யான் வட நாடு நோக்கிப் போர்க்குப் புறப்படக் கருதி யிருப்பது தமக்கும் சம்மதமென்றே நினைக்கிறேன். சென்று வினை முற்றித் திரும்பி வருங்காறும் இவ்வர சின் பொறுப்பனைத்தும் தம்மிடமே வைத்துச் செல்ல வும் கருதியுளேன், என்று முகமலர்ச்சியொடு கூறினன். இரும்பிடர்த் தலையார் அது கேட்டு, “'மன்னர் மன் னரே, உருவப்பஃறே ரிளஞ்சேட் சென்னியின் மைந்தர் போர் புரிவதிலே விருப்பமுடையரா யிருத்தல் வியப் பன்று. மகனுரைக்கும் தந்தை நலத்தை எனவும், 'குலவித்தை கல்லாமற் பாகம் படும் எனவும் அறிஞர் கூறும் உரைகள் பொய்யாமோ? வட நாட்டுப் போர் தொடங்க வேண்டும் என ஐந்தாண்டுகளின் முன்னே எண்ணியது சில காரணங்களாற் றடைபட்டது. அஃது இறைவன் திருவருளால் இப்பொழுது நன்கு நிறை வேறும் என்று எண்ணுகிறேன். அரசின் பொறுப்பைப் பற்றி யான் கூற விருப்பது ஒன்று உண்டு: இந்நாட்டு அரசின் பொறுப்பு யான் எளிதிற் பொறுத்து நடத்தத் தக்க நிலையில் இப்பொழுது இல்லை. ஐம்பெருங் குழுவி னரும் எண் பேராபத்தாரும் ஆகிய பலருள்ளும் அறிவிற் சிறந்தார் சிலரைத் தெரிந்தெடுத்து, அவரது பொறுப் பில் அரசினை நிறுத்தி வட நாடு செல்லலாம். யான் பிறந்த நாட்டுக்கு என்னால் இயன்ற பணி புரிய ஒரு பொ ழுதும் பின் வாங்கேன். வடநாட்டவரைத் தமிழகத்தா ராக்குதற்கு நினைந்து செய்யும் போரிலே வெற்றியே விளைக. நாடு செழிக்க நலம் பெருகுக," என்று கூறினர்.