பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

________________

100 பலவூர்களிலும் புகுந்து, வயல் வளங்களை அழித்துவிடு கிறது. அவ்வாறு விளையும் நஷ்டம் குறைதல் வேண்டும் என்பது குடி மக்கள் கருத்தாகையால், அதற்கிணங்கவும் நாட்டின் நில வளம் நீர் வளம் பெருகவும், காவிரிக்குப் போணை யொன்று அமைக்கவும் வேண்டும். கரைகளுக் குள் அடங்கி ஒடும்படி வேண்டும் முயற்சிகள் செய்யவும் வேண்டும். இவை இந்நாட்டுக்கே பெரும்பயன் விளைக் கும் முயற்சிகளாகுமாயினும், பாரத தேய முழுமையும் ஆளும் அரசர் பிரானுக்கு உரிமையான நாடு செல்வஞ் செழித்து விளங்க ஏதுவாமாகையால், இப்பொழுதே தொடங்கி விரைவிலே முற்றுவித்தற் குரியதாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். வளவன்:- நாம் அங்ஙனமேவிரைவிற் செய்வோம்.. காவிரிக்குக் கரை யமைத்தல் வேண்டு மென்பது எமக்கும் நெடுநாளைய எண்ணமாம். கரையோரமுள்ள ஊரவர் எல்லாம் தத்தம்மால் இயன்றவளவு அரசினர் பொருட்டு மெய்ப்பாடு பட வருவர் என்று எதிர் பார்க்கிறோம்.. பலரும் ஒன்று திரண்டாலன்றி, இவ்வினை முற்றுமா றில்லை. அக நாட்டவரும் தம்மால் இயன்ற முயற்சியும் உதவியும் செய்தல் நலமேயென்று கூறுவோம். அணை யமைத்தல் விரைவிலே தொடங்கப் பெறும். காவிரி தாய்க்குச் சிறு சிறு மக்கள் போல அமைந்த பல வாய்க் கால்களும் உள. அவையும் நன்கமைக்கப் பெறும். இம் முயற்சிக்கெல்லாம் நும் உதவி எதிர் பார்க்கப்படும். குடி மக்கள் உழவு ஒழிந்த காலங்களில் இங்குப் பணி பூண விரைந்து வருவராயின், அரசினர் ஆதரவு பெற்று விரை விலே . முடிக்கலாம். இனி இவ்வாறே பிறர் கருத்தை யும் அறிய விரும்புகிறோம்.