பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

________________

112 புலவர் பலர் அவனைக் காண வரலாயினர். ஆண்டுகள் பல சென்றனவாயினும், குடிகளுக்கு அவன் அரசின் கீழ்க் காலப் போக்கே அறியப்படாமல் என்றும் இன்ப மயமாய்க் கழிந்தது. ஒரு நாள் முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பெருமான் கரிகால் வளவனைக் கண்டு, தம் புலமை நலத் தைக் காட்டிப் பரிசில் பெற விரும்பி வந்தார். அவர், பொருந ராற்றுப்படை யென்றதொரு பெரிய பாட்டைப் பாடி வந்தார். அவர் வருகையை அறிந்த வளவன் அவரை அன்போடு வரவேற்று, அவர் பாடிய செய்யுள் முழுவதையும் நன்கு கேட்டு, மகிழ்ந்தான். பின்னர் அருகிலிருந்த புலவர் பலரோடு அப்பாட்டைக் குறித்து அளவளாவ லாயினன். வளவன்:- ஐய, புலவரே, காவிரிச் சிறப்பை நும் பாட்டிற் கூறிய வண்ணம் அடுக்கிக் கூறி இவ்வவைக் களத்தோரை மகிழ்விக்க வேண்டுகிறோம். முடத்தாமக் கண்ணியார்:- ஐய, அரசர் கோவே, பாட்டு முழுதும் இன்புற்றுச் செவிக்கொண்டு மகிழ்ந்த நீவிர் விரும்பியவண்ணம் வேண்டுமிடங்களில் மறுமுறை கூறுகிறேன். காவிரியைப்பற்றி நான் கூறிய கருத்து அத் துணைச் சிறப்புடைய தாகாது. அதனினும் அழகுபெறக் கூற வல்ல புலவரும் உளர். காவிரியும் இன்னும் எவ் வளவு புகழினும் தாங்கவல்லதே. ஆயினும், என் கருத் தைக் கேட்டலாற் கூறுகின்றேன். மற்ற நாடுகளெல்லாம் கதிரோன் கடுமையால் வெதும்பிப் பஞ்சுச்செடிகள் கரிய, பெருமரங்கள் தீப்பற்ற மக்கள் வருந் - தக்க வறட் காலத்திலுங்கூடப் பல்வகைப் பசுமரங்கடம் துறைகள்