பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெங்கையர் இப்பொருளே பொருத்தமெனக் கூறி யிருப்பதாலும், 'குழவி யிறப்பினும்' என்ற செய்யுள் பாடிய அரசன் பிறகு உயிர் பெற்று வாழ்ந்தான் என் பது ‘மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே' என்று நீதி வழங்கும் நாட்டிற் பிறந்தார்க்குச் செவி சுடும் சொல்லாமாகையாலும், புனைந்துரை வகையாற் புதுமை கள் புகுந்திருப்பினும் உண்மைச் செய்திகளைப் பண்டை யோர் கொள்கைக்கொப்பவே ஆராய்ந்து கூறுவது இந் நூற்றொகையின் நோக்கமா மாகையாலும், தமிழ்ப் புல வர் வரலாற்றிலே கூறியவாறு இங்கும் இரண்டு போர் கள் என்றே விரித்து எழுதியுளேன். இவ்வாறு யான் கருதுவது பொருத்தமேயாமென என் தமிழாசிரியர் தம் கருத்தை வெளியிட்டருளியது எனக்குப் பேருதவி யாயிற்று. - கிள்ளி வளவன் வரலாற்றிலே பழமைகளும் புதுமை களும் கலந்துள. இங்குக் கிள்ளி வளவன் என்று கொண் டது, புறநானூற்றிற் கேட்கப்படுகின்ற சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்பானையேயாம். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இவன் பெய ரொடு ஒரு புடையொத்த பெயர்கள் வருகின்றன. சிலப் பதிகார மணிமேகலைகளின் கால நிலையைப்பற்றிக் கொள் கைகள் பலவாம். அவற்றை யெல்லாம் ஆராய்ந்து முடிவு கட்ட இங்கு இடமுமில்லை ; சிறியேனுக்கு அதற்கு வேண்டிய ஆராய்ச்சித் திறமையும் இல்லை. - சிலப்பதி காரத்திலே சோழன் பெருங்கிள்ளி யென்பான் உறை யூரி லாண்டான் என்று கூறப்படுகிறான். இவன் பெயர் பெருநற் கிள்ளி யென்பார் அடியார்க்கு நல்லார். மணி