பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

________________

117 திரும்பினன். அத்தி, நீரின் வேகத்தால் அடித்துச் செல் லப்பட்டான். நீரிலும் நிலத்திலும் ஆட்டத்தில் வல்லவ னாய் ஆட்டனத்தியென்று பெயர் பூண்டு நாடு புகழ வாழ்ந்த அவனது அழகினையும் ஆடும் திறலையுங் கண்டு காவிரியே அவனைக் கவர்ந்து கொண்டாள் என்று அருகி னின்றார் கூறலாயினர். நீந்துந் தொழிலில் மிக்க பயிற்சி யுடையனாகையாற் கரை சேருமாறு அவன் பல முறை முயன்று தலை தூக்கியும், அழுந்தியும், மேலே போய்க் 'கொண்டிருந்தான். அவன் முயற்சிகள் பலியாமல் காவிரியின் வேகத்தால் கடலினை யடைந்தான். அவன் போகும் வழியைத் தொடர்ந்து கரையில் ஓடி வந்த ஆதி மந்தியும் அங்கு வந்துற்றனள்; கடற்கரையில் நின்று அங்கு நின்றாரைப் பார்த்து, "காவிரியால் விழுங்கப் பெற்று இங்கு வந்த என் தலைவரை யாரேனும் கண்டீர் களோ?" என்று விசாரித்தனள். கரையிலே கடற் காட்சி காணும்பொருட்டு வந்து நின்றுகொண்டிருந்த பெண்டி ருள் மருதி யென்பாள் கடல் நீரிலே உற்று நோக்கி, அதோ! நின் கணவன் நீந்தமாட்டாது கடல் நீரில் மூழ்கு கின்றான்; பார்!" என்று காட்டி, அவள் கூறிய மொழி கள் ஆதி மந்தியின் செவியகம் புகா முன்னரே அவள் விரைந்து கடலிற் குதித்து நீந்திச் சென்று அலைகளால் அடிபட்டு மயங்கும் நிலையிலிருந்த ஆட்டனத்தியைப் பற்றி யிழுத்து வந்து கரையிற் சேர்த்தாள். அது கண்ட ஆதி மந்தி அங்கு விரைந்தோடிச் சென்று, இழந்த மாணிக்கத்தைத் திரும்பப் பெற்ற நாகம் போலவும் இழந்த பழம்பொருளைத் திரும்பப் பெற்ற மனிதர் போலவும் மகிழ்ச்சி மீதூரப் பெற்றுத் தன் தலைவனைத்