பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

________________

118 தழுவிக்கொண்டு, அவனுக்கு நேரிட்ட ஆபத்திலிருந்து மீட்டுக் கொடுத்துப் பேருதவி புரிந்த மாருதியை மனமார வாயார வாழ்த்தி, இறைவனைத் தொழுதனள். பிறகு அருகில் நின்ற ஏவலராற் புத்தாடைகள் கொணர் வித்து ஆட்டனத்தியை அணியச் செய்து தன்னுடன் தொடர்ந்து வந்த தேரிலே அவனை யேற்றித் தானும் அமர்ந்து, புகார் நகரத்துப் பெரிய அரண்மனையை யடைந்தாள். தெய்வச் செயலால் எல்லாம் நலமாய் முடிந்ததை யறிந்த கரிகாலன் மகளையும் மருமகனையும் மனமார வாழ்த்தி உபசரித்தான். பின்னர்ச் சில தினங் கள் வரையில் இவ்வற்புதச் செயலே நாடெங்கும் பேசப்படுவதாயிற்று. புலவர் பலர் நூலாராய்ச்சி செய்யும் தமிழ்ச் சங் கக் கட்டடத்திற்கும், வான நூலாராய்ச்சிச் சாலைக்கும், ஆயுள் வேத வைத்திய வித்தியா சாலைக்கும் கரிகாலன் அடிக்கடி போய் வரும் வழக்கமுடையவனாயிருந்தான். தமிழ்ச் சங்கத்திற்குப் போயிருந்த காலத்தில் ஒருநாள், கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற அந்தணப் புலவர் அவனைக் காணக் கருதி, அங்குற்றார். அவர் பட்டினப்பாலை என்னுமொரு பெரிய பாட்டுப் பாடி வந் திருந்தார். புலவர் பலர் சூழ்ந்திருக்கும் அவ்வமயத்தே அவ்விடத்திற்கு அவர் வந்ததுகண்டு மகிழ்ந்த வளவன், அவரை அவரது பாட்டை அரங்கேற்றக் கூறினான். அவர்க்குத் தக்க உயர்ந்த இருக்கை யொன்றில் அவரை இருக்கச் செய்து, தானும் தன் நாட்டுப் புலவரும் அவர்க்கு எதிர் முகமாக அமர்ந்திருந்து, அவர் பாட் டைக் கேட்கலாயினன். உருத்திரங் கண்ணனார் செய்