பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

________________

120 யுடைய காவிரியாறு என்று நும் நாட்டின் இயற்கை யழகுகளில் மிகவும் சிறந்த வொன்றைக் கூறினேன். வளவன்:--குயில்களைப்பற்றி நீவிர் கூறுவதென்ன? உருத்திரங் கண்ண னார்:-- பரந்த சடையையுடைய முனிவர்கள் தீயிடையில் ஆவுதி செய்து யாகங்கள் இயற்றுமிடத்திருந்து எழுந்த நெய்ம்மணத்தோடு கலந்த புகையைக் கண்டு வெறுப்படைந்து இளமாக்காக்களிலே குயில்கள் ஒடுங்கும் எனப்பட்டது. மேகத்தைக் காணுங் கால் தன் நாவை அடக்கி ஒடுங்கும் இயல்புள்ள குயில், மேகம்போல எழுந்த புகையைக் கண்டு அடங்கி ஒடுங்கி யது என்றும், நறுமணம் கலந்த புகையைக் கண்டு வெறுக்கும் இயல்பு அதற்கு உண்டு என்றும் கூறியுளேன். வளவன்:- அது மிகவும் பொருத்தமே. காவிரி கட லொடு கலக்கும் இயல்பை நீவிர் நன்கு அமைத்துப் பாடி யுளீர். அக்கருத்தை ஒருமுறை சுருக்கி யுரைக்க வேண்டு கிறேம். உருத்திரங் கண்ண னார்:- கரிய தாகிய பெரிய மலை யைச் சேர்ந்த மேகம் போலவும் தாயின் மார்பைத் தழு விய குழந்தை போலவும் தெளிந்த நீரையுடைய கடலிலே காவிரியாறு கலந்தது என்றேன். வளவன்:- இரண்டு உவமைகள் என்ன பயன் கருதி அமைர் தன? உருத்திரங் கண்ண னார்:- அரசர் பெருமானே, ஓர் யாறு கடலொடு கலக்குமிடத்தே கடலலைகள் மலைபோல எழுந்து நிற்கும். ஆகையாலும், காவிரியாற்று நீர் கடல் நீரின் தன்மையடைந்து அதனோடு கலக்குமாகையாலும், மேகம் மலையிற் படிவது போன்றுளது என்று கூறப்பட் ,