பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

________________

126 வளவன்:- புலவர் பெருமானே, எம் நாட்டை நாடி வந்தார்க்கு இங்கே வாழ்ந்து வழி வழித் தழைக்கு மாறு அனுமதி கொடுக்கும் வழக்கம் எம்மிடம் உண்டே யொழிய, அவர்க்குச் சிறிதளவு பரிசில் கொடுத்து உடனே விடை தந்து அனுப்பும் வழக்கம் எம்மிடம் இல்லை. ஆகையால், நாம் இப்பொழுது நமக்கு விடை தரக்கூடாதிருப்பதுபற்றி வருந்துகிறோம். புலவர் பலர் இருந்து வாழ்தற்காக பாம் அமைத்துள்ள புதுமையான மனையகங்களுள் ஒன்றிலே நீவிர் நும் மனைவி மக்களோடு வாழ்ந்திருந்து, இந்நாட்டுத் தமிழ்ச் செல்வம் வளருமாறு உதவி புரிய வேண்டுகிறோம். உருத்திரங் கண்ண னார்:- கற்றாலும் தமிழ்க் கல்வி பைக் கற்க வேண்டும்; கற்று, நல்ல புலமை வாய்க்கப் பெற வேண்டும்; இறைவன் அருட்டுணையும் பெறவேண் டும்; இயற்கை நலம் தோற்றப் பாடும் வாக்கு வளம் படைக்க வேண்டும். புலமைத்திறம் படைத்துப் பெறும் பயன் என்ன? உண்மையிற் புலமையை அறிந்து ஆதரிக் கும் புரவலரை அடைதலேயாம். அவ்வாறு உத்தம குணங்கள் பல வாய்ந்த நும்மைப் பாடிப் புகழும் பேறு பெற்றதாலன்றோ, பின்னாளில் வரும் பெருமக்கள் நும் மைப் புகழும்போது என்னையும் நினைக்கும் பேறு பெற் றேன்? இதனினும் சிறந்த வாழ்வு எனக்கு என்னுளது? விருப்பம் போலவே செய்கிறேன்.