பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

________________

129 கள் ஸமஸ்த ஜனங்களுக்கும் க்ஷேமத்தைச் செய் வதற்காகச் சில கர்மாக்களை விதித்திருக்கின்றன. அவற்றுள், இன்னின்ன வர்ணத்தார் இன்னின்ன கர்மாக்களை இன்னின்ன காலங்களிலே செய்யவேண்டும் என்ற நியதியும் இருக்கின்றது. வைதிக வித்தை இந்த நாட்டிலே பரவுதற்கு உதவியாயிருந்த தங்கள் வமிசத் தார் சாஸ்திரங்களிலே பூர்ண விசுவாஸம் உடையவர் கள். தாங்களும் அப்படியே இருக்கிறீர்கள். இந்நாள் வரையில் எவ்வளவோ புண்ணிய காரியங்களைச் செய்து பூ மண்டலத்தில் உள்ள பிரஜைகளைத் திருப்தி படுத்தி யிருக்கிறீர்கள். தேவ லோகத்தில் உள்ள தேவர் களுக்கு உரிய யாகாதிகளைச் செய்து அவர்களைத் திருப்திபடுத்த வேண்டுவது அரசர் கடமைகளில் ஒன்றாம். தாங்கள் இத்தேசத்திலே அபிவிருத்தி செய்திருக்கும் சாஸ்திரங்கள், தங்கள் முன்னோர்கள் செய்தது போலத் தாங்களும் பல யாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கின்றன. மஹாராஜாவாய் இருக்கிற தாங்கள் இவ்விஷயத்தில் உத்ஸாஹம் காட் டாமல் இருக்கும் பட்சத்தில் பொதுஜனங்கள் சாஸ்திரா பிப்பிராயங்களை உல்லங்கனம் செய்ய இடம் உண்டாகும். தங்களுக்கும். விருத்தாப்பியம் நெருங்கி வந்துகொண் டிருக்கின்றது. அசுவ மேத யாகம் தாங்கள் செய்யத் தக்கதாய்த் தங்கள் முன்னோர் பலர் செய்திருக்கின்றனர். பாரத பூமி முழுதும் தங்களை எதிர்க்கச் சக்தியுள்ள மன்னர் ஒருவரும் இரார். ஆகையால், விரைவிலே தொடங்கி அசுவ மேத யாகம் ஒன்று செய்ய வேண்டு கிறோம். |