பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xiv ரவர்களுக்கும் காலஞ்சென்ற தமிழ்ப்புலவர் சு. அரங்கசாமி ஐயங்கார் அவர்களுக்கும் இந்நூலின் உரிமையை யேற் றுக்கொண்ட ஸ்ரீ. உ. வே. திருநாராயண ஐயங்கார் அவர் களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள் உரியனவாம். தமிழ்ப் புலவர் வரலாறு, பாண்டிய மன்னர் என்ற என் நூற்றொகைகளை அச்சிட வேற்றுக்கொண்டதுபோல இதனையும் ஏற்றுக்கொண்டு எனக்கு ஊக்கம் உதவிய மதுரைப் புத்தக வணிகர் ஸ்ரீமான். இ. மா. கோபால கிருஷ்ணக் கோனார்க்கும், அச்சிடும்போது ஒப்பு நோக்கு தல் முதலிய பணி புரிந்து தவிய என் அன்பர் தமிழ்ப் புலவர் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கும் என் மனமார்ந்த வந்தனங்கள் உரியனவாம். தமிழ் வளர்ச்சியில் ஊக்கமுடைய இளஞ்சிறார் பலர் பெருகிய இந்நாளிலே இந்நூற்றொகை அவருள்ளத்தே உண்மை யான தமிழபிமானத்தை வளர்க்க உதவுமாயின், அது வே இவற்றை எழுதிய தாற் பெற்ற பெரும்பயனாக மதிக்கப்படும். தமிழ்த் தெய்வம் துணை நிற்க. 21-11-31 ) புதுக்கோட்டை நா. கனகராஜையர்