பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

________________

வளவ நாடு; பிற நாடுகளின் சென்னி மணியாய் இலகும் சென்னிநாடு; இன்றளவும் தன் பண்டைப்புகழ் மாறாது சோற்று வளம் படைத்த சோழ நாடு. இந்நாட்டின் பெருமையை எண்ணி யுள்ள முருகிப் புகழ்ந்த பண் டைப் புலவர் எத்துணையர்? அப்புலவர்கள் பாடிய பாடல்கள் இந்நாளிலே இறைவன் அருட்சிறப்பால் நம்மவர்க்கு எளிதிற் கிடைத்தலாலன்றோ நாம் நம் தமி ழகத்தின் இதய கமலமாகிய சோழ நாட்டின் பழம் பெருமையை உள்ளவாறு உணரக் கூடியவர்களா யிருக் கிறோம்? இந்நாடு பண்டைக் காலத்திலே, அறிவும் திறலும் அருளும் ஆற்றலும் பொருளும் புகழும் படைத்த ஒரு தமிழ்ப் பழங்குடியினரால் ஆளப்பட்டது. இக்குடி யினர் ஆண்மையும் வீரமும் நல்லிசைப் புலவர் பலராற் பாராட்டப்பட்டுள. சோழ மன்னர் என்று உலகம் புகழ வாழ்ந்த இக்குடியினர் காவிரி கடலொடு கலக்கும் இடத் தில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தைச் சில காலம் அர சிருக்கையாகக் கொண்டிருந்தனர். ' ஊரெனப் படுவ துறையூர்' என்று புகழ்பூண்டு கோழியென்ற வேறு பெயர் படைத்த உறையூர் நகரைச் சில காலம் அரசிருக்கையா கக் கொண்டிருந்தனர் ; பின்னாளிலே திருவாரூர், தஞ்சா வூர் என்ற நகரங்கள் இவ்வரசினர்க்குத் தலை நகராயின் வென்பர். மனுச் சோழன் திருவாரூரிலிருந்து அரசாண் டான் என்று பெரிய புராணத்திற் கூறப்படுமாயினும், அவன் புகார் நகரத்திலிருந்து அரசியற்றினன் என்று சிலப்பதிகாரம் கூறுவதால், இரண்டு நகரங்களும் அவன்