பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

________________

அரசர் பிரான் தன் உள்ளத்தடக்கிய துயரம் வெளி வரா வண்ணம் பின் வருமாறு பேசினன் : - "அமைச்சர்காள், அன்புடையீர்காள், நுமக்குள்ள மனக் குறையைப் போக்க முயல்வதன்றே எம் கடமை யாம்? யாம் என் செய்தும்? இறைவன் திருவருள் இங் ஙனம் இருந்தது! நாட்டின் நலங்கருதி எம்மால் இயன் றன வெல்லாம் புரிய யாம் ஒரு சிறிதும் பின்னிடை யோம். நீவிர் இப்பொழுது தெரிவித்துக்கொண்டது இறைவன் அருளாலேயே அமைதற்குரியது. எவ்வெ வர்க்கும் முன் வினைப்பயன் மாற்ற வியலாத தொன்றாம். எமக்கு இப்பிறவியில் புத்திரப் பேறு பெறற்குரிய திரு வருள் இல்லாதிருக்குமாயின், யாம் என் செய்யலாம்? இளையோனேனும் புத்திரப் பேறு பெற்றிருப்பின், எம் மனம் அமைதி பெற்றிருக்கும். போர்த் தொழிலிலே பெருவிருப்புப் பூண்டிருக்கும் இளையோன், நாட்டின் நலத்திலேயே நாட்டம் உடையானாயினும், நாட்டுக்கு இளவரசைத் தரும் முயற்சிக்கு இறைவன் அருள் பெற வேண்டியவனே யாமன்றோ ? நீவிர், 'நாட்டின் நலங் கருதி இளவர சொருவனைத் தரல் வேண்டும்,' என்கின் றீர். எம்மால் இயன்ற அறச் செயல் அனைத்தும் புரிந் தும் பயன் பெற்றிலேம். நும்முள்ளே சிலர் கருதுவது போல, இனி யாம் மறுமணம் முடித்து மகப்பேறு பெற விரும்புகிலோம். நுமக்கு விருப்பமிருக்குமாயின், நம் இளையோற்கு மற்றொரு மண்ஞ் செய்து வைக்க விரும்பு கின்றோம். இங்கு வந்திருக்கும் பெரியோர்களில், எவ ரேனும் யாம் இன்ன குடியிலே எம் இளையோன்பொருட் டுப் பெண் கொள்ளலாகும் என்று கூறுவராயின்,