பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

10 அரசன்:- பெண்ணைக் கொள்வதில் அரசர் குடியி னர் ஆலோசித்தற்குரிய நியாயங்கள் பல உள. நாம் முன்னே கூறியவாறே விரைவிலே இளையோனுக்கு மணம் முடிப்பிப்போம். குணமும் நலமும் அறிவும் உரு வும் திருவும் உடைய ஒரு பெண் மணி எளிதிற் பெற லாம் பொருளன்றே? நீவிர் அறிந்த வளவில் எவரே னும் நம் குடியிற் பெண் கொடுத்தற்குரியார் இருப்பின், வெளியிடலாம். புலவர்:- அரசரே, தமிழ்ப் பழங்குடியினராகி: நுமக்குத் தம் மரபின் பெருமையை வளர்க்கும் கருத்து டையார் எவரும் பெண் கொடுக்க ஒருப்படுவர். முன்ன) ளிலே நும் மரபினர் வேளிர் குடிகளிலே பெண் கொள் ளும் வழக்கமுடையராய் இருந்தனர். வேளிர் இனத் தினர் சிறந்த வீரர்; தமிழகத்து மும்மன்னர்க்கும் அவ்வக்காலங்களில் தத்தம்மால் இயன்ற உதவி புரிந்து வந்திருக்கின்றனர். அக்குடியினருள் இங்கும் சிலர் வந்திருக்கின்றனர். அவருள் அறிவினலத்தாலும் பொரு ளின் சிறப்பாலும் மேம்பட்டுத் தலைமை பூண்டிருக்கும் அழுந்தூர் வேளைப்பற்றி இந்நாடனைத்தும் அறியும். அவர் முன்னை நல் வினை வயத்தால் ஒரு பெண்ணருங் கலத்தைப் பெற்றிருக்கின்றார். அவர் மைந்தர் ஒருவர் சிறந்த புலமை படைத்தவராகவும் விளங்குகின்றார். நீ விர் விரும்புவீராயின், அழுந்தூர் வேளின் அருமைக் குமாரியை நம் இளைய மன்னர்க்கு மணம் புரிவிக்கலாம். இம்மண வினை நிகழ்வதில் எவரும் மன மாறுபாடு கொள்ள இடமில்லை.