பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

________________

25 தண்டம் விதித்துத் திரட்டத் தொடங்கினான். இது பற்றியும் பலர் தம் உண்மைக் கருத்துக்களை வெளியிட் டுரைத்தனர். புதிய அதிகாரிகள் சிலரை அவன் அமர்த்தினான்; விசாரணையும் கேள்வி முறையும் இன்றியே தன் அரசிற் குப் புறமான கருத்தையுடையாரென ஒற்றின் மூலம் அறிந்த நல்லோர் பலரையும் சிறையிட்டான். அதனால், நாட்டகத்தே புறங்கூறிப் பொப்பேசி யுயிர்வாழும் புல்லி யோர் பலர் திரிதலாயினர். நல்லோர் எல்லாரும் சிறைக் களம் புகுந்தனர். உண்மை யுரைப்போர்க்கும் அறநெறி புகல்வோர்க்கும் சோழ நாட்டகத்தே இருப்பதற் கிட மில்லையாயிற்று. அரண்மனையகத்தே சிறைப்படுத்தி யிருந்த அர சிளங்கோவைப் புதிய மன்னன், நாட்டு மக்கள் எவரும் அறியா வண்ணம் ஒரு பெருஞ்சிறையிலே மறைவான தொரு கிடங்கிலே அடைத்து வைத்தான்; இரும்பிடர்த் தலையாரையும் சிறையகத்தடங்கிய பிற புலவரையும் சிறைவீடு செய்து சோழ நாட்டின் புறத்தே செல்லுமாறு ஆணை பிறப்பித்து, அனுப்பினான். இரும்பிடர்த் தலையார் பாண்டி நாடு நோக்கிச் சென்றார். அவர் எண்ணமெல் லாம், "அரசனை எவ்வாறு சிறையினின்று மீட்பது? எவ்வண்ணம் முன்போல அரசு புரியச் செய்வது? என்பன பற்றியே யிருந்தது. பாண்டிய மன்னர் சேர மன்னர் என்ற இருவருள் எவரேனும் சோழனுக்கு உதவியாய் நிற்க முன் வருவ ரோவென அறிய முயன்றனர் பிடர்த் தலையார். அவர் முயற்சி அத்திசைகளிற் பலிக்கவில்லை. அவர் பாண்டிய