பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

________________

29 பெறவில்லையே! இதற்கு என் செய்யலாம்? கொலையாளி களைக் கொண்டு கொல்விக்கலாம் என்றால், அச்செய்தி விரைவிலே நாடெங்கும் பரவி என் அரசாட்சிக்குத் தீங்காக முடியினும் முடியும். பலரைச் சிறைக்களப்படுத் தியதால், அவரை ஆதரிக்கும் பொறுப்பெல்லாம் அரசி னர்க்காயிற்று. நான் அவரை யாதரிக்கும்பொருட்டு அவர்தம் உடைமையெல்லாம் கைக்கொள்ள நேரிட் டது. இந்நாட்டின் வருவாய் செலவுக்கு மேல் அதிக மாக இல்லையே! எத்துணை நாட்களுக்கு நூற்றுக் கணக் காக ஒற்றரையும் பெரும்படைத் தொகையினரையும் துணையென்று நம்பியிருப்பேன்? என் மனம் என்று நிம்மதியடையும்? இத்துணைப் புகழ் படைத்த அரசுரி மையைத் தேடியும் என் மனம் கலங்கலாகுமோ? கலக்கத் துக்குக் காரணராக இருப்பவரெல்லாம் அழிந்தால், கலக் கம் தானே அழியும். பெருஞ்சிறைக்களத்தே என்னைப் பகைத்தார் பலர் புகுந்திருக்கின்றனர். இளவரசனும் பிறர் அறியாவண்ணம் அங்கேயே மறைந்திருக்கின்றான். இவரனைவரும் ஏக காலத்திலே தென்றிசை நோக்கற்கு யான் என்ன செயலாம்? எதிர்பாராவண்ணம் ஒரு நாள் இரவிலே இச்சிறைக்களத்திலே நெருப்புப் புகுமாயின், என்ன பயன் விளையும்? என் எண்ணமெல்லாம் நிறை வேறும். ஆகையால், நினைத்த வண்ணமே நிறைவேற்ற முயல்வேன். என் கருத்துக்கொப்ப நடக்கும் ஏவல ருள் ஒருவனை இப்பணியை முடிக்க அனுப்புகின்றேன், என்றாலோசனை செய்து, ஒரு முடிவிற்கு வந்தான். இவ்வாறு முடிவு செய்த, பிறகு, அவன் தன் மனம் அமைதி பெற்றதாய் எண்ணி, அரண்மனைக்குட் சென்றான்; ஓர் ஒற்றனை யழைத்துத் தன் கருத்தைக் குறிப்பாற் கூறி, வேண்டுவன நிகழ்த்தச் செய்தான்.