பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

________________

34 அம்புபோலப் பாய்ந்து, புறத்தே வீழ்ந்தான். விழுந்த இடத்திலும் நெருப்பு மிகுந்திருந்தது. வெகு விரைவிலே இவ்வாறு விழுந்தவனைக் காப்பாற்ற வேண்டுமென்று சிலர் ஓடி வந்தனர். நெருங்கினார் எவரும் அவனை இன் னான் என்று அறிந்திலர். அவன் பாய்ந்து வந்த வேகத் தில் கால்கள் கரிந்து கிடந்ததைக் கண்டனர்; மனமுரு கினர். உடனே சிலர் சேர்ந்து அவனைத் தூக்கிச்சென்று அருகிலிருந்த மருத்துவரில்லம் அடைந்தனர். அவர் சுத்தமான தேங்காய் நெய்யையும் சுண்ணாம்பு நீரின் தெளிவையும் கலந்து, அப்புண்ணில் தடவினர். பிறகு உடன்வந்தார் அனைவரும் பிரிந்து சென்றனர். அறநெறி யில் தலைநின்ற அம்மருத்துவர், அச்சிறுவன் இன்னான் என அறியாராயினும், நன்கு மருத்துவம் செய்தனர். பிறகு எவரும் அங்கு வந்து அவனைப்பற்றி விசாரிக்க வில்லை. முழுவதும் குணமாதற்கு முன்பு இரா வேளை யிலேயே, மருத்துவரிடம் விடை பெறாமலே, அவன்' வெளியேறினன். அவன், "சிறைக் களத்தே தீயிட்ட பகைஞர் இன் னும் என்னென்ன செய்வாரோ! இந்த இரண்டாண்டுக ளாக நான் சிறையகம் இருந்தது போதும். இனி யெங் கேனும் சென்று மறையகத்து வாழ முயல்வேன். என் அருமை அம்மானார் இரும்பிடர்த் தலையார் எங்குற்ற னரோ! அறியேன்! என்று எண்ணமிட்டுக்கொண்டே விரைந்து நடந்தான். உடம்பிலே தீப்பட்டதால் உண் டான வருத்தத்தை மறந்து, எவரேனும் பின் தொடர் வரோ என்று பார்த்துக்கொண்டே விரைந்து நடந்தான். இதற்கிடையில் சிறைக் களத்தே நடந்த செய்தி யைச் சிறிது கவனிப்போம்: அறிஞர் பலரும் நல்லோர்