பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

________________

51 இப்பொழுது ஆண்டு வரும் அரசர் ஓர் இளைஞர் என் பதை யாம் அறியோம். அறிந்திருந்தால், இவ்வழக்கின் பொருட்டு இங்கே வந்திரோம். வந்த பின்பே உண்மை நிலை யுணர்ந்ததாற் பேசிப் பயனில்லை யென்று பின்னி டைந்தோம். இரண்டாம் முதியவர்:- இனியாம் விடை பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். கரிகாலன்:- ஐயன்மீர், நீவிர் வந்த காரியம் நிறை வேறாமலே விடை பெற்றுக்கொள்ள எண்ணுவது பொருத்தமாமோ? வாயில் காவலர் நும்மை என்னிடம் நேரில் அழைத்து வந்தது ஒரு வகையிற் குற்றமே. தற் காலம் இந்நாட்டின் அரசுரிமை வகிப்பவர் மிகவும் முதி யவர்; நும் கருத்துக்கிணங்க நூற் பயிற்சியும் அனுபவ மும் படைத்தவர். அவர் தாமே நேரிற் பார்த்தற்குரிய பொறுப்பான காரியங்களைத் தவிர மற்றவற்றை யெல் லாம் கவனித்துக்கொள்ளுமாறு என்னை நியமித்திருக் கிறார். வாயில் காவலர் நீவிர் வந்த காரணத்தை அறியா மையால், நும்மை என்னிடம் அழைத்து வந்தனர். சோழ நாட்டிலே அரண்மனை வாயில் வரை வந்து நியாயம் பெறாது சென்றவரைப்பற்றி இதற்கு முன்பு என்றா வது நீவீர் கேட்டதுண்டா ? பசுவின் கன்றின் பொருட் டுத் தன் மகனைத் தேர்க்காலில் ஊர்ந்த மனுச் சோழன் தோன்றிய குலத்திலே அக்குறை உண்டாகுமோ? ஆகை யால், பெரியீர்காள், சற்றுப் பொறுங்கள். நானே நேரிற் சென்று அரசரை நியாய சபைக்கு அழைத்து வரு கின்றேன். இங்கிருந்து! வலப் புறமாகச் சிறிது தூரம் சென்றால், நியாய சபை இருப்பது தோன்றும். நும்மை