பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

________________

59 பேசிய பேச்சிலே ஒரு குறை யிருப்பதை யாம் காட்ட வேண்டுவது அவசியமாம். நீர் இப்பொருளை யெல்லாம் அயல் நாட்டிலேயே தேடினீராயினும், நம் நாட்டுக் குடி மக்களாயிருக்கும் உரிமை யுடையாரில் நீரும் ஒருவரா கையால், நீர் தேடிய செல்வத்தால் உமக்கு வரும் பெரு மை அரசினர்க்கும் உரியதாம். அவ்வாறு இல்லையாயின், கடல் வியாபாரத்தாற் பெரும்பொருளீட்டிய மாநாய்கர் பொன்னாற் செய்விக்கப் பெற்ற எட்டிப் பூவை அரசரி டம் சிறப்பாகப் பெற்று எட்டி என்று பட்டம் பெறு தல் பொருளற்ற செய்கையாம். அன்றியும், உமது பெற் றோர், பிறந்தோர், பெருநாட்டோர், உற்றோர், உகந்தோர் முதலிய எல்லோரும் இந்நாட்டகத்தே யிருத்தலால், அயல் நாட்டிலே தேடிய பொருளேயாயினும், அங்கேயே அதனை எவர்க்கும் கொடுத்து தவ மனம் வராமையும் இங்கே வாழும் உற்றோர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வருதலும் பொருத்தம் என்பது உமக்கே தோன்றுகிறது. எங்கெங்கு அலைந்தாலும், எத்துணை நாடுகள் கண்டாலும், எவர்க்கும், ' நந்நாடு நன்னாடு,' என்ற உணர்ச்சி மனத்தினுள் ஊறி யெழுதலை நீவிர் அறிவீர். உமக்கு உம் நாட்டிலே உண்மை யன்பு இல்லா திருப்பின், இத்துணை யாண்டுகள் கழிந்த பிறகு இங்கு வந்திருக்கமாட்டீர். நீர் தேடிய பொருளால் வரும் சிறப்பு உமக்கு மாத்திரம் அன்றி, நும் நாட்டவர்க்கும் உண்டென்பதை நீரும் அறிவீர். ஒரு நாடு செல்வம் உடையது என்று சொல்லப் பெறுவது இவ்வாறு பல வழிகளாலும் தேடி நாட்டின் நலத்தை வளர்க்கும் மக்கள் முயற்சியாலன்றோ ? இவ்வாறு இருக்க, நீவிர்