பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

________________

- 73 எண்ணத்தாலன்று. அன்பும், அரிய அறமும், அருளும், பொருளும், புகழும் எல்லாம் ஒருருவாய் வந்தது போன் றிருக்கும் அரசே, நீ வடக்கிருக்கவே துணிவையாயின், நீ செல்லும் நல்லுலகத்திற்கு உன்னைத் தனித்துச் செல்ல விடோம்; யாங்களும் உடன் வருவோம். இந்நாள்வரை நின்னுடன் பயின்று இவ்வுலகிலேயே இமையவருலக வாழ்வைத் துய்த்திருந்த யாங்கள், நீ இமையவ ருலக வாழ்வை நாடிச் செல்கையில் நின்னை யிழந்து பாழாகும் இவ்வுலகில் வாழ்ந்திருக்க இசையோம், என்று எல் லோரும் ஒரு மனமாய்க் கூறினார்கள். சேரன் அது கேட்டு மனம் வருந்தி, அவர்களை யெல் லாம் தன்னைத் தொடரும் எண்ணத்தை மாற்றுமாறு வேண்டினன். “இப்பொழுது இக்களத்தே வடக்கிருத் தல் நினக்கு இயைவதாயின், எமக்கும் இயைவதே," என்று அவர்கள் உறுதியாய்க் கூற, இறுதியில் வேறு வழியின்றி அவனும் அதற்கிசைந்தான். பின்பு அவரனைவரும் நன்னீராடி, நல்லுடை யுடுத்து, உலகனைத்தும் படைத்துக் காத்து அழித்து மயக்கி அருளும் அமலனை நெஞ்சில் நிறுத்திப் பாச றைப் புறத்தே வடக்கிருந்தனர். பெருஞ்சேரலாதன் சிறந்த குணங்கள் பல உடையன்; பழி தாங்கப் பொறாத பழங்குடியிற் பிறந்தவன்; சான்றோர் பலாது உடனுறை வாழ்வை அடையும் பேறு பெற்றவன், "என்ற புகழ் போர்க்களமெங்கும் பரவியது. அவன் அப்பிறப்பிலேயே உடம்பு பெற்ற பயன் பெறக் கருதினான் என்பது அறி ஞால் உணர்ந்து பாராட்டப்பட்டது. வெண்ணிப் பறந்தலையில் நிகழ்ந்த இவ்வருஞ்செய்தி உடனே அங்