பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

________________

75 இவ்வாறு அப்புலமைச் செல்வியார் பேசியதைக் கேட்ட கரிகாலன், மிகவும் அதிசயித்து, "அம்மையீர், பெருஞ்சேரலாதரது பெருமையை யான் இன்று நன்கு அறிந்தேன் . புறப்புண் பட்டது அவர் புறங்கொடுத்ததா லன்று. ஆகையால், அஃது அவர்க்குப் பழி தரும் என்று பான் எண்ணுகிலேன். ஆயினும், அதனை அவர் பழியென எண்ணி வடக்கிருந்தது, தம் குலத்திலே தம் மால் அணுவளவேனும் குறை நேர்ந்தது எனப் பிறர் எண்ணாதிருக்கும் பொருட்டே என்று எண்ணுகிறேன். எங்ஙனமாயினும், சான்றோர் பலரும் தம்முடன் விண் புகுமாறு செய்யத் தக்க அரசரைப் படைத்ததால், நம் தமிழ் நாட்டுக்குப் பொதுவிலே விளையும் சிறப்பு அதி கமே. இன்றோடு போர் நிறைவேறியது. பாண்டிய மன் னரும் அவர் படைஞரும் பதினொரு வேளிரும் அவர் துணைப்படைகளும் அவரவர் தத்தம் நிலைக்கும் பயிற் சிக்கும் தக்கவாறு அற நெறிக்கு மாறுபடாது போர் புரிந்து தம் வீரத்திற்குரிய பரிசிலாகிய வீர சுவர்க்கம் எய்தினர். சோழ நாட்டு அரசன் இளைஞன் என்று இவர் அனைவரும் கருதி ஒருங்கு திரண்டு போர் புரிய வந்து எதிர்த்துயின்று இவ்வெண்ணிப் போர்க்களத்தில் இவ்வாறு உயிர் இழக்க நேரிட்டது எனக்கும் வருத்தம் விளைக்கின்றது. அமைதியாய் முன் போல அனைவரும் வாழ்ந்திருப்பின், இவ்வின்னல் நேர்ந்திராது. இதுவே தமிழ் நாட்டகத்தே பிறரை அடக்கிப் பிரதாப சீலனாய் விளங்கவெண்ணி யான் இயற்றிய பெரும்போராம். இப்போர் யானாக விளைத்துக் கொண்டகன்று என் பதை யான் நுமக்குக் கூற விரும்புகிறேன். என்னைச்