பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

________________

82 நாட்டு மக்கள் கருதவில்லை; சென்றால், வெற்றி பெற்றே திரும்ப வேண்டும் என்று கருதியே இவ்வாறு கூறினார் கள். வளவன் :- அது நிற்க. ஐய, என்னை இவ்விளம் பருவத்திலே மணம் புரிந்து மக்களைப் பெற்று வாழு மாறு கேட்பது நியாயமெனத் தோன்றுகின்றதா? போர்க் களத்திலும் போர்ப் பயிற்சியிலும் ஆசையுடைய ஓர் ஆண் மகனுக்கு மண வாழ்வு இன்ப வாழ்வாகத் தோன்றுமா? | அமைச்சர்:- மக்கள் இனம் நிலவுலகத்திலே இடை யறாது பெருகி வருதற்பொருட்டு இறைவன் அமைத்த வாழ்வின் நிலைக்கு மாறாக நாம் செல்லுதல் இயலுமோ? அரசர்க்குப் போர்த் திறம் சிறப்புடையதே யாயினும், அவர்தம் மரபு அழியாது காத்தலும் அவர்க்குரிய கடமைதானே? ஆகையால், உரிய கடமையை உரிய காலத்திலே செய்யுமாறு நாட்டு மக்கள் வேண்டியது குற்றமாகுமோ ? | வளவன் :- நாட்டு மக்கள் விருப்பத்திற்காகவே மணம் புரிவதாக வைத்துக்கொள்ளவோம். பெண் கொடுக்க வரியார்களாகிய சேரரும் பாண்டியரும் இப் பொழுது நம் நாட்டில் தம் பெண்ணை வாழ்விக்கும் நிலைமையில் இல்லையே! இதற்கு என் செய்வது? அமைச்சர்:- சேரர் குடியிலே இப்பொழுது மணப் பருவம் உடைய பெண்கள் இல்லை; பாண்டியர் குடியில் உளர். விருப்பம் இருப்பின், அவர்கள் நம்பால் மனத் தகத்தே வைத்திருக்கும் பகை நீங்குமாறு பேசி, மண வினை நிறைவேற்றலாம். அதன் பிறகு அவர்கள் நம்