பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அனா கவுலோவ் துருக்மேனியா

(பி. 1920)

கழுகு

தகதகக்கும் விண்மீன்கள் மறைவதற்கு முன்னால், தன்ஒளியைத் தான் இழக்கும் தொடுவானப் போதில், மிகஉயர முகில்இடையில் கழுகுஒன்று தோன்றும்; நிலத்திடையில் மஞ்சள் மணல் மீதில்விழி நிறுத்தும்.

பாலைவனத்து உயிர்கள்எலாம் வெறுத்துஅஞ்சும் கழுகு பகரஒண்ணா இகழ்ச்சியுடன் மண்உலகை நோக்கும். மாலுறுநல் சமவெளியின் விந்தைகளை எல்லாம் மனம்நெகிழாது எரிச்சலுடன் சலிப்புடனே காணும்.

எனினும்அது விழிதாழ்த்திப் பறக்கையிலே ஒருநாள் எதிர்பாராக் காட்சிகண்டு திடுக்கிட்ட தன்றே. இனிமைஇலா வறள் நிலத்தில் மாந்தன்கை வண்ண

எழுச்சியினைப் பண்பாடிப் பாய்ந்தது.ஒர் ஆறே.

97