பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவாக விடுபட்ட என்றன் சொற்கள், மூண்டபெரும் சுழல்காற்றாய்ப் பாய்ச்சல் கொள்ளும். அடியார்ந்த கனவிருந்து பீரிட் டோங்கும் அன்புஎழும்பி உன்மீதில் விரையும் ஒங்கும். ஒடியாத உள்ளத்தில் உணர்கி லாயா? உனக்கிலையா அச்சஉணர்வு என்னைக் காண?

முன்னைப்போல் இருப்பாயா! மகிழ்ந்துஏற் பாயா? முன்னைப்போல் தோழன்என அழைத்தி டாயா? என்னை நீ சந்திக்கும் நேரம் எல்லாம் உன்நெஞ்சை மீண்டும்நீ திறந்தி டாயா?

துயரற்ற இன்முறுவல் தோன்றி டாதா? துணைவழியில் நம்பிக்கை மின்னி டாதா? விரைவற்ற அமைதியுடன் இனிய பாங்கில் விழைவுறும்என் கையொடுகை பிணைத்தி டாயா? இல்லை! இனிமேல் இல்லை! நில்நில்! எல்லை இல்லாத் துன்பினுள் ஆழ்கிறேன் எனைச்சிறைப் பிணித்துளாய், அதுமுறை யன்று. ஏனெனில் எவனது களவினில் யானும் பங்குண் டிருப்பனோ, அவனைப் பழித்துநான் நம்பி என்னை நாடிய உன்றன் அன்பிற்கு இணங்க ஆட்படு கின்றேன். மாந்தர் அழினும் அவர்தம் விழிகள் கண்ணிர்ச் சுவடே காட்டா ததுபோல் என்றன் அழுக்காற் றுள்ளம் ஊமை ஆனதே உரிமை இன்மையால்...

என்முறை யீட்டினைக் கேட்பாய்: என்னைப் பற்றி அவனிடம் இயம்புக, அவனைப் பற்றி என்னிடம் வேண்டா, யாரை நீ விரும்பினும் விரும்பா விடினும் நான்உன் நம்பிக்கை யாளனோ

100