பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

விளாடிமிர் லுகவ்ஸ்க்கோய் உருசியக்

கூட்டரசு (1901-1957)

வேனில் பாடல்

சுனையூற்று மிகுந்தோடும் விண்ணோங்கும் நீல மலைப்பாங்கில் எஃகுருக்கும் ஊரல்பங் கதனில்

அழகாலே புகழ்பெற்ற தொழிலாளி நங்கை முழுநேரம் கடமையிலே முனைந்தாழ்ந்து நின்றாள்.

எவருமே லையூபாஷா காதல்பெற வில்லை, எவருமே அவள்நெஞ்சத் திறவுகாண வில்லை, காரிகையின் கனிவுக்குப் பலர்திரண்ட துண்டு, காரிகையோ புறக்கணிப்பாள் சிடுசிடுப்புக் கொண்டு.

தற்செருக்கை லையூபாஷா கொண்டிருந்தாள் இல்லை எற்றியவள் இகழ்ச்சியுடன் நோக்கியதும் இல்லை.

செம்மாந்து சார்பற்றுத் தொழில்புரிந்து வாழும் கம்மியரின் மரபுதித்த கடமைமிகு கன்னி.

பெறற்கரிய பெரும்பரிசாம் பெண் இவளைக் கொள்ளும் திறம்எவர்க்கோ என்றெஃகு தொழிலாளர் திகைப்பர்.

1 1 0