பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரலைகள் விடியலுடன் பெருகொளியால் மோதும் காதலருக்கு இனிமைதரும் கங்குல்மறைந் தேகும்.

மேற்றிசைக்கு நிழல்கள்தமை வைகறைது ரத்தும் தோற்றமுற வெள்ளமிசை மலைகள் நிமிர்ந் தோங்கும் நாற்றிசையும் கருங்கற்கள் குருதிஒளி பொழியும்.

உடையட்டும் என்நெஞ்சம் ஓங்கும்கொடுந் துன்பம் உடைந்திடுங்கால் ஓங்கிஎழும் உள்ளுறங்கும் பாட்டு.

செக்கர்ஒளி உலையின் தழல் செழித்துக்காய்ந் திடவே சிக்குநூறாய் உடைநெஞ்சே, அவள் எழில்பா யட்டும்.

படபடத்துத் துடித்தேகும் பறவையினைப் போலே அடடேநீ இளவேனில் உருசியமாய்ப் பொலிக.

நெஞ்சேநீ உடைந்திடுக. நீஒதுங்கேல், மற்ற நெஞ்சங்கள் உணர்ந்திடநீ யாரென்று காட்டாய்.

இருதிசையில் இரண்டொளியும் இறங்கிமறைந் தனவே அருமைநீர் அரமகளிர் சுசோங்கடலில் மிதப்பர்.

உரால்மலையாம் தந்தையரை அழைக்கும்.அவர் பாடல்

சரேல்என்றங்கு அவர்விடையும் கரைஎதிர்ந்து மீளும்.

கங்குல்எலாம் லையூபாஷா கனிவுமிகும் பாட்டு பொங்கிவரும் வெள்ளமென எதிரொலித்து மிஞ்சும்.

விண்ணளவாய் ஓங்கிஎழில் பைன்மரத்தால் தோயும் மண்ணகத்துப் பெருங்கோயில் மண்டபத்தில் பாயும்.

விடிவெள்ளி நோக்கிவிம்மிப் பாடல்விரைந் திடவே நெடுங்காட்டில் நீளிசையை முழக்கினளே பெண்ணாள்.

வேனிலையும் வேட்கைமிகும் காதலையும் வேண்டித் தான்.இனிய புறாஇசைக்கும் தீங்குரலைத் தந்தாள்.

I I 2