பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ஜஸ்டினாஸ் மார்கின்கேவிஸியஸ் இலித்து

வேனியா (1%. 1930)

இங்காளே இலெனின் பிறந்தநாள்

இப்பொழுது இலெனின் பிறந்த நாளில் தப்பிலாது அவரை மணிதொறும் நினைப்பேன்; நாள்தொறும் நாளேடு களைநான் படிக்கையில் அவரைப் பற்றியே தவறாது நினைப்பேன்.

காலை உணவுக் கவளம் எடுக்கையில் அவரைப் பற்றியே உவந்தின் புறுவேன். பள்ளிக்கு மகளைச் செல்கென விடுக்கையில் அவரைப் பற்றியே படர்ந்திடும் நெஞ்சம். மற்றென் வேலையைப் பற்றித் தொடர்கையில் அவரைப் பற்றியே கவிந்திடும் நினைவு. மங்கிய நகர்ப்புற மங்குல் விண்ணிலே, வானூர்தி இரைச்சலைத் தான்கேட் கையிலே அவரைப் பற்றியே இவர்ந்திடும் கருத்து. புதிய கட்டடம் உதித்தெழும் போதிலும்; இடம்பெ யர்ந்திடும் குடும்பம் ஒன்றுதன் மூட்டை முடிச்சினை ஏற்றிடும் போதிலும்: அன்னை வளர்த்த அவரைக் கொடிகளின் மென்தளிர் இலையிடைத் தென்றலின் அசைவிலும்:

1 2 3