பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோஷலிச அமைப்பிலிருந்து பிறந்ததென்று சொல்லி வருகிறேன். அவர்களிடம் மிகக் கூடுதலான பாராட்டைத் துரண்டுவ தெல்லாம் நம் இலக்கியம் தொடர்ந்தும் வற்புறுத்தலாகவும் சோவியத்து ஒ ன் றி யம் மக்களிடத்திலே முரிக்க முடியாத நட்புறவை இணைத்து வாழும் உயரிய உணர்வைக் குடும்பத் தினிடையே வளர்த்து வலுப்படுத்தி வருவதாகும். நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் சொல்வது, எப்படி உடன் பிறப்புக் குடியரசுகளின் எழுத்தாளர் நூல்கள் உருசிய மொழி களிலும் நம் நாட்டு மற்றைய மொழிகளிலும் மொழிபெயர்க் கிறார்கள். பொதுச் சொத்தின் பாகங்களாகச் சோவியத்துப் பண்பாட்டின் பொது நிதியமாகியுள்ளது என்பதாகும். -

நாம் எல்லோரும் விரும்புவன பண்பாடு, அறிவியல், இலக்கியம் மற்றும் மனிதனின் பேரறிவால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் அணு ஆற்றலிலிருந்து பாண்பாடல்வரை ஒருபோதும் அவை அழிவுக்கு உதவாதவை. ஆனால், முன்னேற்றம், மனிதத் தன்மை ஆகியவற்றில் செவ்விய நோக்கங்களை நோக்கிச் செலுத்தப்படல் வேண்டும்.

நான் என் மனத்தில் பதிந்துவிட்ட சித்திரத்தை நினைவுகூர வேண்டும். எங்கள் முன்பு இருந்த ஈரானிலிருந்து அஸ்கா பாத்துக்குச் செல்லும் சாலை கெளடனின் எல்லைக்கம்பம் வரை சென்றது. அங்கே நாங்கள் கண்ட ஒர் அடையாளக் குறிப்பு: “இங்கே சோவியத்து ஒன்றியம் உள்ளது. இந்தப் பன்னெடுங்கால வழியிலே சென்ற ஒட்டகப் பயணிகள் தொகுதி ஒரு புதிய உலகில் நுழைவதாகக் கண்டது. வாயில்களின் ஊடாக வந்ததும் சோவியத்து ஒன்றியத்தினுள் நுழைந்துவிட்டனர். அவர்கள் தாண்டி வந்துள்ளது இருளும், ஒடுக்குதலும், அச்சுறுத்தலும் நிறைந்த உலகிலிருந்தாகும். அவ்வுலகம் ஆயிரம் ஆண்டுகளாகக் கண்டது. இப்போது வந்துள்ளதோ ஒரு புதிய நேர்த்தியான உலகத்தை உருவாக்கும் விந்தை நிலத்திற்கு. வரலாற்றுக் காலவழியும் அங்கேயிருக்கிறது. அதன்வழி இந்தியப் புரட்சியா ளர்கள் வந்து மாஸ்கோ சென்று இலெனினைக் கண்டு அவருடன் பேசியிருக்கிறார்கள். ஆனால், கவுடான் வாயில் ஒர் அடையாள முக்கியத்துவம் உடையது. அவை கிழக்குச் சோவியத்தின் விழிப்பைச் சுட்டுகிறது. நம் நாடு ஆசியக் குடியரசுகளின் எடுத்துக்காட்டு அவற்றின் வளமான பொருளாதாரத்தையும் ஓங்கும் பண்பாட்டையும் சால்பையும் அறிவூட்டுவதாகும். ஆசியக் குடியரசுகளின் எழுத்தாளர்கள் அண்மை, தொலைவு மற்ற நாடுகளில் பற்றியெழும் ஆர்வத்தை எழுப்ப வல்லவையாய்

xvi