பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கள் மக்கட் காக அவர்கள் தம்மை இழந்தார்கள் பொங்கும் துமுக்கி பொசுக்கும் குண்டுகள் நாட்டைப் பொசித்தனவே.

பெருஞ்சீற் றத்தின் பணிப்புயல் பகைமை சாடி ஒழித்ததுபோல் பெரும்போர்ச் செயலால் வீரர் அனைவரும் சமமாய்ப் பீடுற்றார்.

பின்னோர்க் காகப் பெரும்போ ரிட்டு மறைந்த மறவர்க்கே, அன்னை மண்ணாள் தன்சீர் மடியில் அடைக்கலம் தந்தனளே.

விரைந்தோ டுங்கால் இருபக் கத்தின் வீரர் கல்லறையை மறவா தேஅம் மறவர் களுக்குநீ நன்றி வணக்கமிடு.

வீரர்கள்! போரில் சாவை விழைந்தார் அச்சப் படவில்லை, ஆர்வக் கனவு நம்பிக் கைகளை இறப்பிலும் கொண்டிருந்தார்.

நிலத்தில் புதைந்தார் பெயரை மாண்புற நாளும் நினைத்திடுவோம்: மலர்த்திநம் வாழ்வை மணக்கச் செய்தது படைஞர் மறவாண்மை.

தன்னலம் இல்லாச் செயல்கள் தம்மை நூலில் கற்கையிலே அந்நல இன்ப உயர்வை அடைய ஆர்வம் கொளவேண்டும்.

213