பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

எர்கின் வகிதோவ் உஸ்பெகிஸ்தான்

(a. 1936)

ஒளிப்படம்

என்றும் மறந்திட மாட்டேன்என்று எண்ணி இருந்தேன்நான் என்றன் இனிய நண்பர் அன்பின் இயல்புடையார் ...... அந்தோ இன்று மறந்தேன் அவரை! நான்கண்ட ஆண்டைக்கூட மறந்தே போனேன், அடகெட்டேன்!

அவரை நினைவில் இருத்திடும் ஏதோ அடையாளம் உண்மையின் அன்பொளி மின்னும் அரிய முகச்சிரிப்பு! அவரின் அருமை முகத்தில் எதையோ துருவுகையில் கண்ணில் என்னையும் கொண்டுள் ளாரா எனக்காண்பேன்.

கடந்து வந்த உலகைத் தட்டுத் தடுமாறித் தடவிப் பார்த்து நம்பிக்கை அற்று நிற்கையிலே அடர்ந்த ஆழத் திருந்தோர் எதிரொலி அழைத்ததுவே.

உணர்வை யும்பகுத் தறிவையும் விழித்தெழச் செய்தவற்றைக் கிளறு கிளறெனக் கிளறினேன். ஆகா! பாரீரே! இனிய என் மக்காள் உங்கள் நெஞ்சுள் என்வாழ்க்கை எழுதுநூல் குறிப்பாய்ச் சிதறிக் கிடத்தல் காணிரே.

229