பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுள்ள காலத்தில் மிகப்பலவாம் நாளில் பேய்ப்புயல்கள் எத்தனைதான் சுழன்றடித்த போதும், துன்னுபல எல்லைகடந்து அப்பால்சென் றாலும் துயரமிகும் என்பாட்டின் அழைப்பை அவர் கேட்பார்.

என்னுடைய இடர்க்குரல்அச் செவிகளிடை வீழும் இறந்தஎன்றன் உடுக்கள்.அவர் உயிர்க்கதிரால் தெரியும். இன்னதுவும் குழந்தைமையில் மறந்திட்ட பாடல் இரவுவரு கதைகளில் எதிரொலித்தல் போலும்.

14