பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை நாழி உனைச்சுடவே - அட ஏமாற்றம் என்னைத் துளைத்திருக்கும்? புத்தம் புதிதாய் உனைக்கொணர்ந்தார் - என்றன் பூரிப்பை என்னென்று நான்உரைப்பேன்.

புன்னகை யோடும் மதிப்புடனும் - உனைப் பொற்புடன் மேசையில் கொண்டுவைத்தார் பொன்னின் முகத்தினில் நெய்கனிந்தாய் - இது போதும்உன் முத்திரை ஆவதற்கே.

உன்பொன் நிறத்தில் மொறுமொறுப்பில் - ஆவி ஓங்க எழுந்த நறுமணத்தால் எங்கள் எளிய மேசையொடு - கந்தல் ஏழ்மை விரிப்பும் பொலிந்தனவே.

கம்பு வயலின் நறுமணம்போல் - நீயும் கமகம என்று கமழ்ந்திருப்பாய் - உன் இன்ப நினைவினில் மூழ்குகிறேன் - அட என்றென்றும் உன்னை மறப்பதுண்டோ?

இல்லத் திருந்து மகிழ்ந்தாடி - அட எத்தனை ஆண்டுகள் தோழர்களே, நல்லகம் பின்அடை ஒன்றை எண்ணி - என்றன் நாக்கில் நீர் ஊறிடும் இன்னமுமே.

ஆலிலை

கார்முகிலின் பேரிரைச்சல் கலக்கிடாதே என்னை சேர்ந்தெழுப்பும் பேய்க்காற்றால் சிதைந்திடாது இருப்பேன் பேராலின் கிளையதனில பிணைந்திருக்கும் இலைபோல் ஆர்க்கும்புயற் கசையாமல் வாழ்வைப்பற்று வேனே.

$ 8