பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஸ்யுன்பாய் எரலியேவ் கிர்கீசியா

(‘). 1921)

என் தாலிசியன் மலைக்குதிரை

நீர்நாயின் பளபளப்பும் நெய்கனியும் பொலிவும் நேர்உறுதி மென்மையுடன் நிமிர்ந்தநடைச் செலவும் சீர்திகழுக் கொண்டொழுகு வெள்ளிஒளிச் செம்மை போர்த்தபிடர் மயிருடனே போகும்மலைக் குதிரை.

காதுகளோ புதல்வளர்ந்த கவின்கோரை போலும் ஊதுலைபோல் நெருப்பு:உமிழும் ஒளிமூக்குத் துளைகள். மோதுமலை நின்றி.ழியும் முழங்கருவி போலே தோதுடைய வெண்பிடரிக் குதிரைதுமித்து ஒடும்.

மெருகிட்ட குளம்புகளோ கொப்பரைபோல் மின்னும் இருகண்ணும் காவல்.நெருப்பு என்னஒளி காலும். அருமைமிகும் என்னுடைய தாலிசியன் குதிரை பெருவானை நோக்கிஎழும் கழுகெனவே பறக்கும்.

பறந்துயரும் கழுகைப்போல் பதிவிருக்கும் என்மா இறங்கிவரும் காற்றுாடே இரைந்துவரும் தீப்போல் பறந்தெழுந்து மேல்நோக்கிப் பாய்ந்துவிரைந் தேறும் சிறந்துநிற்கும் குன்றின்முடிச் செம்மாப்புத் தாழும்!

55