பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொத்தம், முப்பது உயர்மட்ட தொழில் கல்வி நிலையங் கள் உள்ளன. இவற்றில் பதின்மூன்று ஆசிரியப் பயிற்சி நிலையங்கள் ஆகும். உஸ்பெக்கிஸ்தானில், இரண்டாயிரத்து ஐந்நூறு கிண்டர்கார்டன் (பாலர்) பள்ளிகளும் ஆயிரத்துத் தொள் ளாயிரம் நான்காண்டு பள்ளிகளும் மூவாயிரம் எட் டாண்டு பள்ளிகளும் ஆயிரத்து ஐநூறு பொது உயர்நிலைப் பள்ளி களும் எழுபத்து ஏழு சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளி களும் நூறு தொழிற் பள்ளிகளும் நடக்கின்றன. இவற் றில் எல்லாமாக, தொண்ணுாறு ஆயிரம் ஆசிரியர்கள் பணி புரிகிருர்கள். எல்லாவித கல்விப் பணியாளர்களே யும் கணக்கெடுத்தா ல், அவர்கள் எண்ணிக்கை இலட்சத்து நாற்பத்தைந்தாயிரமாக உள்ளது. எல்லாக் கல்வி நிலையங் களிலுமாக பதினறு இலட்சம் பேர்கள் சேர்ந்துள்ளார்கள். சோவியத் ஒன்றியத்தின் சில பகுதிகளில், புரட்சிக்கு முன்னரே, சரியாக வளர்க்கப்பட்ட, தொடக்கப்பள்ளித் தொடர்கள் இயங்கி வந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எஸ்தோனியா குடியரசில் 1913 இல் தொண்ணுாற்று இரண்டாயிரம் பேர்கள், தொடக்கப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கை இப்போது இரண்டு இலட்சத்து பதினைந் தாயிரமாகப் பெருகி விட்டது. லிதுவேனியாவில் படிப் போர் எண்ணிக்கை இலட்சத்துப் பதினெட்டாயிரத்தில் இருந்து ஐந்து இலட்சம் அறுபத்து இரண்டு ஆயிரத் துக்கு உயர்ந்து விட்டது. சோவியத் ஆட்சிக் காலத்தில், கல்வியின் தரமும் பெருமளவு மாறிவிட்டது. புரட்சிக்கு முன்னர், பாட்டாளிகளின் குழந்தைகள் அதிக பட்சம், தொடக்கக் கல்வியை மட்டுமே சிந்திக்க முடியும். சோவியத் ஆட்சியிலோ, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக் கழகப் படிப்பு ஆகியவற்றையும் எல்லோருக்கும் இலவசமாகத் திறந்து விட்டார்கள். இது சட்டப் புத் தகத்தில் மட்டும் காணும் உரிமையல்ல; அன்ருட வாழ்க் கையில் நடைபெறும் நிகழ்ச்சியாக உள்ளது. - 23