பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கோட்பாடுகளும் நிலைகளும் சோவியத் ஒன்றியத்தில், பொருளியல் முன்னேற். றத்திற்கும், சமுதாய ஒருமைப் பாட்டிற்கும். கலைப் புரட்சிக்கும் முக்கிய கருவியாகக் கல்வி பயன்படுகிறது. ஜார் கால இரஷ்ஷியா பின் தங்கியது. இதுவே , சோவி யத் ஆட்சியில் பெரிதும் தொழில் மயமாகி விட்டது. சோவியத் வேளாண்மை, விஞ்ஞான தொழில் நுட்ப அடிப் படையில் நடத்தப்படுகிறது. பயிர் வேலைகளை, இயந்தி ரங்களைக் கொண்டு நடத்துகிருர்கள். நூற்றுக்கு மேற் பட்ட எல்லா தேசிய இனங்களும் அமைதியோடும் ஒற் றுமையோடும் வாழ்கின்றன. சோவியத் சமுதாயம், மேட்டுக் குடிகள், சாதாரண பாமரர்கள் என்று பிளவு பட்டு இல்லை. சோவியத் ஒன்றியத்தில் கலேயுணர்வு பர வலாக உள்ளது. அது, என்றும் தேங்கிக் கிடக்கவில்லே. அது, எப்போதும் உயிர்த் துடிப்போடு முன்னேறிக் கொண் டிருக்கிறது. சோவியத் கல்வி முறையின் வெற்றிகரமான செயல்பாடே, இத்தனைக்கும் காரணம் ஆகும். வரலாற் றுக் கண்ணுேட்டத்தில் அறுபது ஆண்டு காலம் குறுகியதே. இக்குறுகிய காலத்தில், விரிந்த இந்நாட்டின் இருபத்தைந்து கோடி மக்களும் ஒளி பெற்று விட்டார்கள். நாடு தழுவிய கலைப் புரட்சியை உருவாக்கியவர்கள் குடி மக்களே. அதன் பலன்களைத் துய்ப்பவர்களும் அவர்களே. மற்ற துறைகளைப் போலவே, சோவியத் நாட்டின் பொதுக் கல்வியும், சமுதாயத்தின் தேவைகள், விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சி, பொது மக்களின் கலை உயர்வு, தொழில் பற்றி கம்யூனிசப் போக்கு ஆகியவற்றின் அடிப் படையில் வளர்கிறது. பண்டைய முற்போக்கு, ஜன நாயக மரபுகள், அக்டோபர் புரட்சி தொடங்கியுள்ள 34