பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் பள்ளிகளில் சமய போதனை கிடையாது. சோவியத் கல்வி, மனச் சாட்சி உரிமை, விஞ்ஞான லோ காயுதவாதம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோவியத் கல்வியின் குறிப்பிட்ட நோக்கங்களைக் கவனிப்போம். இதன் நோக்கங்கள் வருமாறு: (அ) மனித குலம் சேகரித்துள்ள பொது அனுப வங்களை செரிப்பதன் மூலம் ஏற்படும் அறிவினை வளர்க்கும் அறிவுக் கல்வி. (ஆ) நாட்டுப் பற்று, கூட்டுடைமை, தொழில் பற்றியும் பொதுச் சொத்து பற்றியும் சரியான கண் னேட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு, நானயம், ஆகியவற்றை வளர்க்கும் ஒழுக்கக் கல்வி. (இ) துன்னிவு, உறுதி, தாங்குதல், தன்னடக்கம், சோர்வடையாமை, எழில், ஆகியவற்றை வளர்க்கும் உடற் பயிற்சி. (ஈ) இயற்கை, சமுதாயம், மானுட உறவு ஆகிய வற்றில் உள்ள அழகினைப் புரிந்து பாராட்டும் இயல்பினை வளர்க்கும் கலைக் கல்வி. (உ) சமுதாயத்தைப் பராமரிக்கும் உற்பத்தி முறை களை நன்ருக அறிந்து கொண்டு, அவற்றில் ஈடுபடுதலேயும் நாட்டின் பொருளியல் தேவைகளுக்கேற்ற திறன்களைப் பெறுதலையும் ஊக்கும் தொழில் நுட்பக் கல்வி. சோவியத் கல்விக் கூடங்களை கீழ்க் கண்டவாறு பிரிக் கலாம். (1) பால்வாடிகள், நர்சரிப் பள்ளிகள், கிண்டர் கார்டன்கள் (2) பொது, உயர்நிலைப் பள்ளிகள் (3) தொழில் நுட்பப் பள்ளிகளும் தொழிற் பயிற்சி நிலை யங்களும் (4) சிறப்புப் பயிற்சி அளிக்கும் உயர்நிலைப் பள்ளிகள் 43