பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கு முந்திய கல்வி முறையாகப் பள்ளியில் படிக்கச் சேருதல் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு வயதுகளில், ! தொடங்குகிறது. சில நாடுகளில், பிள்ளைகளுக்கு ஐந்து வயது நிறைந்ததும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுவார்கள்; இன்னும் சிலவற் றில் ஆறு முடித்ததும் சேர்ப்பதுண்டு. சோவியத் ஒன்றியத் தில் ஏழு முடிந்ததும் முறையான பள்ளிப் படிப்பு தொடங் குகிறது. பள்ளியில் முறைப்படி சேரும் வரையில், கல்வி காத்துக் கொண்டிருக்கிறதா? இல்லை என்பதே உண்மை. கல்வியெனும் நடவடிக்கை, குழந்தைப் பிறந்தது முதலே தொடங்குகிறது: ஆயுள் முடியும் வரை தொடர்கிறது. ஒவ்வொரு மனிதரும் தான் வளரும், வேலை செய் யும், வாழும், பொருள், சமுதாயச் சூழ்நிலைகளால் பாதிக் கப்படுகிரு.ர். மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல், குடும்பச் சூழல், சமுதாயச் சார்புகள் ஆகியவை அவரிடம் கல்விப் பொறிகளே வாழ்நாள் முழுவதும் ஏற்றுகிறது. நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் கல்வி பெறு வதிலிருந்து தப்ப முடியாது. நம்மைச் சுற்றி இருப் பவைகளிடமிருந்து நாம் பலவும் கற்றுக் கொள்ளுகிருேம். நாம் வாழும், பணி புரியும், சுற்றுச் சார்புகளிலிருந்து கற்றுக் கொள்ளுகிருேம். தாயின் இனிய புன்சிரிப்பு. தந்தையின் பொசுக்கும் சிடுசிடுப்பு. அத்தையின் அன்பான அணேப்பு ஆகிய பொடி விஷயங்களும் கல்விக்கு மூலங் களாக அமைகின்றன. அன்னையின் துர்ய புன்முறுவலும் தந்தையின் தீமை கருதாத சிடுசிடுப்பும் கல்வியைத் தருவதாயின். கல்வி எப்போது தொடங்குகிறது. குழந்தை பிறந்தது முதல் கல்வி இயக்கம் தொடங்குகிறது. குறிப்பிட்ட ஒரு வயதை 45