பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் பள்ளியில் ஒரு வகுப்பு எவ்வளவு பெரி யது? தொடக்கப் பள்ளிகளில் பிரிவுக்கு நாற்பது மாளுக் கருக்கு மேல் இருக்கக் கூடாது. உயர்நிலைப் பள்ளிகளில் பிரிவிற்கு முப்பத்தைந்திற்கு மேற்படக் கூடாது. தொலை துரங்களிலும் மலைப் பகுதிகளிலும் எட்டியுள்ள ஊர் களுக்கு மேற்படி அளவுகோலைக் காட்டி, தொடக்கப் பள்ளி நிறுவுவதைத் தடுப்பதில்லை. பல பத்தாயிரக் கணக் கான பள்ளிகள், இருபதுக்கும் குறைந்த சேர்க்கையோடு ஒர் ஆசிரியரை மட்டும் கொண்டு நடந்து வருகின்றன. சோவியத் பள்ளிகளில் பாடம் கற்பித்தல் எம்முறை யில் அமைந்துள்ளது? எல்லாப் பாடங்களுக்கும் ஒரே வகுப்பாசிரியர் என்னும் அடிப்படையிலா? ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வோர் ஆசிரியர் என்னும் அடிப்படையிலா? இரு முறைகளும் நடைமுறையில் உள்ளன. தொடக்கப் படிவங்களில் ஒர் ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் நடத் துகிருர். ஆண்டுக்கு ஆண்டு அதே பிரிவோடு மேல் வகுப் பிற்குச் செல்வார். தன் மாளுக்கர் தொடக்கப் பள்ளி யைத் தாண்டும் வரை, ஒரே பிரிவோடு ஆசிரியர் செல் வார். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இசை யில் பயிற்சி பெற்றவர்கள். என்ருலும் இசை ஆசிரியர் தனியாக இருப்பார். தொடக்கப் படிவங்களுக்கு மேல், பாடத்திற்கோர் ஆசிரியர் என்னும் முறையைப் பின்பற்றுகிருர்கள். பாட ஆசிரியரும் தன் வகுப்பு அடுத்த படிவத்திற்குப் போகும் போது, அவ்வகுப்போடு செல்வார். சோவியத் பள்ளி ஆசிரியர்களின் தகுதிகள் என்ன? தொடக்கப் படிவ ஆசிரியர்கள், எட்டாண்டு பொதுக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பின், நான்காண்டு ஆசிரியப் பயிற்சி பெறுகிருர்கள். பத்தாண்டு படித்துத் தேர்ச்சி அடைந்தவர்கள் ஈராண்டு ஆசிரியப் பயிற்சி பெறுகிருர் கள். தொடக்கப் படிவங்களுக்கு மேற்பட்ட படிவங்களில் பாடம் சொல்லும் ஆசிரியர்கள் பல்கலைக் கழகங்களிலோ அவற்றிற்குச் சமமான ஆசிரியப் பயிற்சிக் கழகங்களிலோ G1