பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல் மொழிகளில் நூல்கள் உண்டு. இத்தகைய துர்லக - வசதியைப் பள்ளிப் பிள்ளைகள். நன்முகப் பயன்படுத்து கிரு.ர்கள். - m * : சோவியத் ஒன்றியம் முழுவதிலும் கல்வியாண்டு செப்டம்பர் முதல் தேதி தொடங்குகிறது. இந்நாள் தனிச் சிறப்புடையது. அன்று எல்லாக் குழந்தைகளும் தங்கள் ஆசிரியர்களுக்கு மலர்களைக் கொண்டு வருவா கள் . மாளுக்கர் காட்டும் பாசத்தை பள்ளி ஆசிரியர் களும் இயக்குநர்களும் காட்டுகிருர்கள். பள்ளியின் இயக்கு நரும் அவருடைய ஆசிரியர்களும் மாணுக்கர்களே நுழை வாயிலில் சந்தித்து வரவேற்பார்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் அன்பான வரவேற்பு உண்டு. முதல் எட்டு படிவங்களின் பள்ளியாண்டை நான்கு பருவங்களாகப் பிரிக்கிருர்கள். ஒன்பது பத்து படிவங்கள் இரு அரையாண்டு என்னும் முறையில் நடக்கின்றன. முதல் நான்கு படிவங்களின் பள்ளியாண்டு மே மாதம் 31 ஆம் நாள் முடிகிறது. ஐந்து முதல் ஏழு படிவம் வரை, ஜூன் 19 ஆம் நாள், ஆண்டு முடிகிறது. மற்றப் படிவங்களுக்கு ஜூன் 25 ஆம் நாள் முடிகிறது. ஒரு பாட நேரம் 45 நிமிடங்கள். பாட நேரங் களுக்கிடையில் பத்து நிமிட இடைவேளை உண்டு. தொடக் கப் படிவங்களில் மூலாதாரக் கல்வியே உண்டு. வாரத் திற்கு இருபத்திரண்டு பாடங்கள் நடக்கும். தொடக்கப் பள்ளியில், தாய் மொழியே முக்கிய மாகக் கற்கும் பாடம். மாளுக்கர்கள் படிக்கவும் எழு தவும் கற்றுக் கொள்ளுகிருர்கள். பேசப் பயிற்றுவிக்கும் பாடங்களும் உண்டு. இரஷ்ஷியரல்லாத மக்கள் வாழும் பகுதிகளில், இரஷ்ஷிய மொழியை மூன்ரும் படிவத்தி லிருந்து, விருப்பப் பாடமாகக் கற்பிக்கிருர்கள். I ITTLநேரத்தில் கிட்டத்தட்ட பாதி, மொழிகள் கற்பதற்கு ஒதுக்கப்படுகிறது. o தொடக்கப் பள்ளிகளில் நாள்தோறும் ஒரு கணக்குப் பிரியட் உண்டு. வாரத்திற்கு ஒரு பிரியட் சித்திரத்திற் 63.