பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்படும் மாற்றங்களைத் தெளிவுபடுத்தும். உழைப்பால் உருவான எல்லாவற்றின் மேலும் மதிப்பை வளர்த்து, பல தலைமுறைகளாக நிகழும் போராட்டங்களைக் காட்டி, மாளுக்கரிடம் சீரிய அவாக்களைத் துண்டும். சோவியத் ஒன்றியத்தில், பொதுக் கல்வி முறை யோடு, தொழில் நுட்பக் கல்வியும் இரண்டறக் கலந்துள் ளது. ஆங்கில மொழியில், சாதாரணமாக, தொழில் நுட்ப இயல்' என்னும் போது கொள்ளும் பொருளே, சோவியத் சூழ்நிலையில் கொள்ளக் கூடாது. அடிப்படை யான பொதுக் கல்வியைப் பெற்ற பிறகு பெறும் ஒரு நிலைப் பயிற்சியையே, 'தொழில் நுட்பக் கல்வி' என்னும் ஆங்கிலச் சொற்ருெ டர் குறிக்கிறது. சோவியத் கல்வி முறையில், இது பொதுக் கல்வியில் ஒன்றிய ஒரு பகுதி யாகும். பொதுக் கல்வியின் இப்பகுதி இல்லா விட்டால் கல்வி குறைவுடையதாகும். சோவியத் ஒன்றியத்தில், தொழில் நுட்பக் கல்வி யின் மூலம், படிப்பு, சமுதாய வாழ்க்கையோடு நெருக்க மாகப் பின்னப்படுகிறது. இத்தொழிற் பயிற்சி, வேளாண் மை, தொழில், உற்பத்தியின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதோடு, கருவி கரணங்களைக் கையாளப் பயிற்சி கொடுக்கிறது. மானுக்களின் வயது, அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயிற்சி, அக்கம் பக்கத்தில் உள்ள தொழில் கள், ஆகியவற்றையொட்டி. பள்ளியில் நடக்கும் வேலை யின் அளவும் தன்மையும் மாறுபடும். பள்ளிகளிலும் தொழிற் கூடங்களிலும் பெறும் பல்வகைத் தொழிற் பயிற்சியோடு சமுதாயத்திற்கான பிற தொண்டுகளை ஆற்றிப் பழகுகிருர்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் தொண்டுகளை மேற்கொள்வதால், குடி மக்களின் கட மைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிருர்கள். கல்வி, வெறும் ஏட்டுப் படிப்பாக இருந்து, செயல் களிலிருந்து விலகி விடும் போது, கருத்தால்: உழைப் பதற்கும் 'கரத்தால் உழைப்பதற்கும் இடையே பெரு வெளி. செயற்கையாக ஏற்பட்டு விடுகிறது. உற்பத்திகள் 66